நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் "செமட்டசெவண" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக "விசிரிநிவாச" வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் "விசிரிநிவாச" வீடமைப்பு பயனாளர்களுக்கு காசோலை வழங்கல் மற்றும் வீடுகளைப் புனரமைப்பதற்கான உரிமைப் பத்திரம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலி சாஹிர் மெளலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் , உதவி அரசாங்க அதிபர், வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் ஜெகநாதன் , பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment