மாகாண மட்ட போட்டியில் சாதணை படைத்த மாணவி இப்றாவுக்கு மருதமுனை மக்களால் நடாத்தப்பட்ட சரித்திர வரவேற்பும் ஊர்வலமும் (06.08.2016) நடைபெற்றது.
பெரியநீலாவணை கமு/ அக்பர் வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்விபயிலும் அப்துல் லத்தீப் பாத்திமா இப்றா மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் சம்பியன் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். கடந்த வாரம் திருகோணமலை கந்தளாய் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் 11வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 3.51 மீற்றர் பாய்ந்து இந்த சம்பியன் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
சாதனை படைத்த மாணவி அப்துல் லத்தீப் இப்றாவுக்கு அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற சரித்திர ஊர்வலத்தில் மாணவியின் பெற்றோர், பயிற்றுவித்த ஆசிரியர் எஸ்.எம்.அஸீம், முன் நாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், பாசாலை சமூகம், சமூக அமைப்புகள், வர்தகர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி பரிசுகளும் வழங்கி கெளரவித்தனர். இதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் கெளரவிப்பு விழா நடைபெற்றது. இதில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜெலீல், கலாநிதி அஷ்செய் எம்.எல்.முபாறக் மதனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment