7 Aug 2016

கிழக்கு மாகாணத்தில் முன்பிருந்த அமைச்சர்கள் வீதிகளை அபிவிருத்தி செய்யவில்லை – அமைச்சர் ஆரியவதி கலப்பதி.

SHARE
மட்டக்களப்பு மவாட்டத்திற்கு 133 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கு 92 மில்லியனும், அம்பாறை மாவட்டத்திற்கு 143 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்திக்காக
இவ்வருடம் எனது அமைச்சின் மூலம்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவின் பரிந்துரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் 1440028 ரூபா நிதி ஓதுக்கீட்டில் மட்டக்களப்பு குருமண்வெளி துறையடி வீதி கொண்கிறீட் இடப்பட்டு புணரமைக்கப்பட்டு சனிக்கிழமை (06) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி வீதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில்….

நான் இவ்வமைச்சுப் பதவியைப் பெறுப்பேற்றதன் பின்னர் அனைவருடனும் ஒத்துழைத்து சமாதானத்துடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அமைச்சராக உள்ளேன். சனிக்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 கோடி ருபாவுக்கு மேல் அதிகமான பணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அங்குரார்ப்பண வேலைகளை மேற்கொண்டோம்.

வீதிகளை அமைக்க வேண்டும், பாடசாலைகளை அமைக்க வேண்டும்  என்றுதான் அதிகளவு மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். அதுபோல் மக்களுக்குப் பயன்படும் வீதிகளை நாம் அபிவிருத்தி செய்து வருகின்றோம் வீதிகளை அபிவிருத்தி செய்யவில்லையாயின் ஏனைய வேலைகள் எதுவும் செய்யமுடியாது. அமைச்சர்கள் கிராமங்களுக்குள் சென்றால்லான் பழுதடைந்து கிடக்கும் வீதிகளின் நிலமை தொடர்பாக அவர்களுக்கு விளங்கும். கிழக்கு மாகாணத்தில் எனக்கு முன்பிருந்த வீதி அபிவிருத்தி அமைச்சர்கள் இவ்வாறான வீதிகளை அபிவிருத்தி செய்யவில்லை இதனையிட்டு நான் கவலையடைகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு பெண் அமைச்சர் நான் மாத்திரம்தான் இருந்து செயற்பட்டு வருகின்றேன் இந்நிலையில் இவ்வருடம் வீதி அபிவிருதிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியைவிட அடுத்த வருடம் அதிகளவு பணம் ஒதுக்கிடு செய்யலாம் என நினைக்கின்றேன்.

சில அமைச்சர்கள் அவர்களினதும் அவர்களுக்கு வேண்டியவர்கள் உள்ள வீதிகளை மாத்திரம்தான் அபிவிருத்தி செய்வார்கள். அவ்வாறில்லாமல் மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் மக்கள் எம்மை மத்தித்து நடப்பார்கள் அடுத்த முறையும் எம்மை மக்கள் அவர்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்வார்கள்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நல்லாட்சி முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நல்லாட்சியை குழப்பாமல் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல வேண்டும். இத்தியா, ஜப்பான் போன்ற நாட்டு மக்கள் அவர்களின் நாட்டுப்பற்றுடன் வாழ்கின்றார்கள் அதுபோல் இலங்கையில் நாம் அனைவரும் இலங்கையர் என்ற பற்றுடன் வாழ வேண்டும்.

2 கோடி மக்கள் தொகை உள்ள எமது இலங்கை நாட்டைப்போல் 10 மடங்கு உள்ள இந்திய மக்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் வாழும்போது சிறியதொரு இலங்கைக்குள் இருந்து கொண்டு இலங்கையர்கள் என்ற உணர்வுடன் நாம் வாழ முடியாதுள்ளது. 

எனவே இலங்கை நாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முத்தான நாடாக மாற்ற வேண்டும். சிங்களவர், முஸ்லிம், தமிழர்கள் அனைவருக்கும் சிவப்பு நிறத்தில்தான் இரத்தம் ஓடுகின்றது. எங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 

இனப்பிரச்சனை, ஜாதிப் பிரச்சனைகள் இல்லாமல் இந்த சிறிய நாட்டிற்குள் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்ற போதங்கள் இன்றி அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: