சிவில் அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணி தொடக்கம் 11.30 வரை முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
எனினும் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்டு காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளோடு அவர்களது உறவுகள் வாழ்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேசத்தின் உதவியுடன், தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு சர்வதேசகாணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment