30 Aug 2016

இணையத்தள ஊடகங்கள் என்மீது சேறுபூசுகின்றன. மா.ச.உறுப்பினர் ஜனா சீற்றம்- (வீடியோ)

SHARE
(பழுவூரான்)


சிரம சத்திய வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியினை வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாலர் பாடசாலைக்கான சுற்றுமதிலுக்கான  அடிக்கல் நடும்நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் 'தன்மீது சில இணையத்தள
ஊடகங்கள் கடந்தகால சம்பவங்களை வைத்து சேறுபூசவதாக கூறினார்' அவர் மேலும் உரையாற்றுகையில்,


சில இணையத்தளங்கள் ஒரு சில அரசியல் வாதிகளை எதிர்காலத்திலே வளர்த்தெடுக்க வேண்டும். நேர்மையாக, துணிச்சலாக தங்களது சொந்த பணத்தினை மக்களுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளை அழிப்பதன் மூலம்தான் இன்னும் சில அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் அவர்களை வளர்த்தெடுக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிடப்படும் சில இணையத்தளங்கள்  குறிப்பிட்ட அரசியல் வாதிகளை சேறுபூசும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

உங்களுக்கு தெரியும் எமது ஈழப்போராட்டம் 1983ம் ஆண்டு ஆயுதப்போராட்டமாக வீரியம் அடைந்தது.  இலங்கை சுதந்திரம் அடைந்த பாலத்தில் இருந்து எமது உரிமைகள் மறுக்கப்ட்டன. குறிப்பாக 1956ம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச்சட்டம் அமுல்படுத்த முற்பட்டதில் இருந்து பிரச்சனைகள் ஆரம்பமானது. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள்களாக வாழ வேண்டும் என்றும் நாங்கள் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை என்பதற்காக எமது அரசியற்தலைவர்கள் அரசியலில் அஹிம்சை ரீதியாக ; எமது உரிமைகளைப் பெறுவதற்கு போராடினார்கள். இறுதியாக அது வெற்றியளிக்காது போனமையாலே ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

1983ம் ஆண்டிலே இந்நாட்டிலே ஏற்பட்ட இனக்கலவரத்தினால் குறிப்பாக வெலிக்கடை  சிறைச்சாலையிலே 53 எமது அரசியற் போராட்ட தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். தெற்கிலே தமிழ் பேசும் மக்கள் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

எமது பிரதேச இளைஞர்கள் எமது மக்களை காப்பாற்ற சாரை சாரையாக ஆயத இயக்கங்களிலே இணைந்தார்கள். அக்காலப்பகுதியில் குறிப்பிடும்படியாக ஐந்து இயக்கங்கள் இருந்தன். TELO, EROS, PLOTE, LTTE, EPRLF என்பனவாகும். இவ்வாறு போராடிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் 1986ம் ஆண்டில் தமிழ் இயக்கங்களுக்குள் சகோதர மோதல்கள், யுத்தங்கள் ஏற்பட்டன. இந்த சகோதர யுத்தத்திற்கு முன்னும், பின்னும் குறிப்பாக 2001ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாதற்கு முன்னர் நாங்கள் பல அரசியற்தலைவர்கள், மிதவாத தலைவர்கள், தளபதிகள், போராளிகள் மற்றம் பொதுமக்கள் என பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம்.  1970ஆண்டு காலப்பகுதியிலே யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பட் துரையப்பா அவர்கள் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக நான் ஒர இயக்கம் என்ற கூறமாட்டேன். சகல இயக்கங்களும் தங்களுக்கள்ளேயே பழிதீர்த்துக்கொண்டார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் மற்றும் தருமலிங்கம் ஆகியோரும் கொழும்பிலே இலங்கை இந்திய ஒப்பந்தத்pன் பின்பு இலங்கை இராணுவத்துடன் மற்றும் அரசாங்கத்துடனும்  பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது 1977ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கொல்லப்பட்டார். அவரது பாரியார் யாழ்ப்பாண மேயர் கொல்லப்பட்டார். சட்டத்தரணி சிவபாலன்  மற்றும் மட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து கொல்லப்பட்டார். அவரது மனைவி கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதி மாத்தையா கொல்லப்பட்டார். TELOக்குள் தளபதியாக இருந்த தாஸ் அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் கொல்லப்பட்டார்.  PLOTE இன் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் உட்கட்சி போரிலே கொல்லப்பட்டார். அதே கட்சிக்குள் இருந்த சந்ததியார் கொல்லப்பட்டார். இப்படி எத்தனையோ பேர் கொல்லப்பட்டு நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என உணர்ந்து கொள்ள வேண்டும். 

1990 காலப்பகுயில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஒரு பிரதேசத்திற்கு பொறுப்பாகவும் இருந்தேன். அந்த காலப்பகுயில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நான்னு வருடங்களாக ஒரு இணையத்தளம் என்மீது சேறை வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றது. ஆரையம்பதியிலே ஒரு விடுதலை புலி பெண் உறுப்பினர் ஒருவரின் கொலை மற்றும் அதனுடன் இடம்பெற்ற சம்பவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நான் ஒரு கொலைகாரன் என என்னை சித்தரித்து வருகின்றனர். எமது விடுதலைப்போராட்ட காலங்களில் சகோதர இயக்கங்களுக்குள் படுகொலைகள் இடம்பெற்றதை இந்த இணையத்தள ஊடகங்கள் அறியவில்லையா? 2001ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு உருவாகியது.

கிழக்கிலங்கை பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்புடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் EPRLF, TELO , தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து நாம் அனைவருக்குள்ளேயும் பிழைகள் இருக்கின்றன அவர்றை மறந்து தமிழ் மக்களுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணிப்போம் என இன்ற அவ்வாறே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இன்றும் அன்றைய இயக்கங்களின் தலைவர்கள் வடக்கிலே இருககின்றார்கள். அவர்களை அந்தபிரதேச இணையத்தளங்களோ, பத்திரிகைகளோ விமர்சிப்பதில்லை. காரணம் அவர்களுக்கு பிரச்சினைகள் தெட்டத்தெளிவாக தெரியும். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே குறிப்பாக பட்டிருப்புத் தொகுயில் உள்ள சில அரசியல் வாதிகளை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தனிமனிதனை அவமானப்படுத்துவது, குற்றம் சுமத்துவதினையே  கருத்தாகக் கொண்டு சேறுபூசும் நடவடிக்கையினைக்  மேற்கொண்டு வருகின்றது. எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டும் தமிழ் மக்கள் நிம்மதியாக அரசியல் உரிமையுடன் வடகிழக்கு இணைந்த சுயாட்சியினை பெற தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: