இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு
வெள்ளிக்கிழமை (12) காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தில் நடைபெற்றவுள்ளது.
இதில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புபவர்கள் நேரகாலத்திற்குச் சமூகம் கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் சபாரெத்தினம் சிவயோகநாதன் வியாழக் கிழமை ( 11) காலை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
இதனபோது கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சொத்துக்களை இழந்தவர்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், உட்பட அனைவரும் இதில் கலந்து கொண்டு அங்கு அமைந்திருக்கும் உண்மையைக் கண்டறிதல், நீதியைப் பெற்றுக் கொடுத்தல், இழப்பீடு வழங்குதல், மீழ நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய 4 பிரிவுகளிலும்; தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம்.
பிரதேச செயலாளர்கள் மூலமாகவும். ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புக்களினூடாகவும் மக்களுக்கு அறிவித்துள்ளதாகவும், இவ்வாறான அறிவித்தல்கள் கிடைக்காதவர்களும், இதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுப்பதாகவுதம் அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment