16 Aug 2016

எமது பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை அகற்றுவதில் பாரியபிரச்சினைக்கு முகங் கொடுத்து வருகின்றோம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன்

SHARE
உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுவரும் கொத்தணி முறையிலான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய திங்கட் கிழமை (15) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு
உட்பட்ட பிதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை கலந்து கொண்டார்.

 மண்முனை தென் எருவில் பற்று, ஆரையம்பதி, காத்தான்குடி ஆகிய உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்தே குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

வளங்கள் குறைந்த பிரதேச சபைகளோடு வளங்கள் கூடிய பிரதேச சபைகள் இணைந்து கொண்டு கூடுதலான வேலைகளை மேற்கொள்வதற்காகவே குறித்த கொத்தணி முறையிலான வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

திண்மக் கழிவுகளை சரியான முறையில் அகற்றாமையினால் பலவேறு பட்ட சுற்றாடல் சார் சுகாதார பிரச்சினைகளுக்கு முங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  கொத்தணி வேலத்திட்டத்தினூடாக  திண்மக் கழிவகற்றலினை  மேற்கொள்வதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்  இது எமக்கு வெற்றியளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன்  இதன்போது தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: