மக்களின் கருத்துக்களை அறியும், இவ்வாறான நல்லிணக்கக் குழுக்கள் எமது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு அரசுக்குச் சமர்ப்பிக்கின்றன. ஆனால்
இங்கு தெரிவிக்கும் கருத்துக்களை பெரும்பான்மைச் சமூகம் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளும் என்பது கேள்விக்குறியாகும். தேசிய நல்விணக்கம் இன்றுவரை உதட்டளவிலும், ஒரு ஏட்டுச் சுரக்காயாகவுமாகத்தான் இருந்து வருகின்றது. தேசிய நல்லிணக்கம் அடிமட்டத்திலுள்ள பாமர மக்களிடத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டும் ஏனெனில் அடிமட்ட மக்கள் மத்தியில் முறையான தெழிவூட்டல்கள் இன்மையினால், இனமுறுகல்கள் ஏற்படுகின்றன.
என பெரியபல்லாறு சர்வாத்த சித்திவிநாயகர் ஆலயத்தின் செயலாளர் என்.கமல்ராஜ் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது. இதில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
அடிமட்ட மக்கள் அறிவு ரீதியான சிந்தனைகளைப் பயன்படுத்தும் விதங்களையும், சரியான முறையில் எடுத்தியம்ப வேண்டும். எனவே இவ்வாறான செயலமர்வுகள், கருத்துக்கள் அறியும், நெறிமுறைகள் என்பன கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை சமூகம் தேசிய நல்லிணக்கம் எனக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்நாட்டில் தேசிய நல்லிணுக்கம் ஏற்படுமா? என எனக்கு நம்பிக்கை இல்லை, தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராக பாதயாத்திரைகூட நடைபெறுகின்றது. அண்மையில் கண்டியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் சென்ற பாத யாத்திரை தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பாத யாத்திரை அல்ல அது தேசிய நல்லிணக்கத்திற்கு எதிரான பாதயாத்திரையாகத்தான் அமைகின்றது. எனவே தேசிய நல்லியக்கம் என்பதை ஒரு சமூகம் சார்ந்ததாக இல்லாமல் அனைத்து சமூகத்தைச் சார்ந்ததாகவு அமைய வேண்டும் என அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment