21 Aug 2016

செயலற்றுப் போயிருக்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்களால் கிராம அபிவிருத்தியில் பாரிய பின்னடைவு- கிழக்கு முதலமைச்சர்

SHARE
கிராமங்களின் ஒட்டு மொத்தமான அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் செயலற்றுப் போய்க் கிடப்பதால் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களைச் சந்தித்து உள்ளுர் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் சனிக்கிழமை மாலை (ஓகஸ்ட் 20, 2016) ஏறாவூர் நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலமைச்சர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், வெறுமனே பதிவை மாத்திரம் மேற்கொண்டு விட்டு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர். செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஒருசிலர் அவ்வப்போது கிடைக்கும் ஒப்பந்த வேலைகளைச் செய்வதற்காக இயங்குவதால் மாத்திரம் கிராமங்கள் ஒரு போதும் அபிவிருத்தியடையாது. 

இந்த ஒப்பந்த வேலைகளை மாத்திரம் செய்யும் நோக்கத்திற்காக மட்டும் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் மகளிர் அபிவிருத்திச் சங்கங்களும் உருவாக்கசப்படவில்லை. இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டு மொத்தமான அந்தக் கிராமத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கேயாகும். ஆனால், நடைமுறையில் இது நடப்பதில்லை. கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக உள்ள அரசாங்கத்தின் அடிமட்ட அமைப்புக்களாகும்.

 அதனால் இந்த அமைப்புக்கள் மிகவும் பலம்வாய்ந்த அமைப்புக்களாகச் செயற்பட முடியும். எனவே, அந்தக் கிராமத்திலுள்ள சகல தரவுகளும், தேவைகளும், சாத்தியப்பாடான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகளையும் கிpராம அபிவித்தி மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள நடைமுறையில் இவை எதுவுமே இன்றி வெறும் பதிவிலக்கத்தோடு மாத்திரம் கிராம மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் செயலற்றுக் கிடக்கின்றன. இந்த ஸ்தம்பித நிலைப்பாட்டை மாற்றி சுறுசுறுப்புள்ள இயங்கும் அமைப்புக்களாக கிராம மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை மாற்றினால் பல்வேறு அபிவிருத்திகளை கிராமங்கள் அடைந்து கொள்ள முடியும்” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: