1 Aug 2016

நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான செயலமர்வு

SHARE
சமூக அபிவிருத்தி நிறுவகம்ம (Institute of Social Developmentனச்சாட்சிகள் மையங்கள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்புடன் (International Coalition of Sites of Conscience) இணைந்து ஆகஸ்ட் 01 தொடக்கம் 03 ம் திகதிவரை மட்டக்களப்பு, பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில்  நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான ஒரு வதிவிடச் செயலமர்வை ஆரம்பித்துள்ளது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் சம்பந்தப்பட்டிருக்கும் நிபுணர்களின் பங்கேற்புடன் இச்செயலமர்வுகள் இடம்பெறுகின்றன.
ஏனைய நாடுகளில் செயற்படுத்தப்பட்ட நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் சம்பந்தப்பட்டு, இது தொடர்பாக அந்நாடுகள் கற்றுக் கொண்ட பாடங்களை அறிந்திருக்கும் நிபுணர்கள் இச் செயலமர்வில் வளவாளர்களாக செயற்படுகின்றனர்.

நிலைமாறு கால நீதி தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கென உத்திகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களை பலப்படுத்துவதே இச்செயலமர்வுகளின் நோக்கமாகும் என செயலமர்வு இணைப்பாளரும் ஆய்வாளரும் வளவாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பலவற்றில் பின்வரும் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருக்கும் நிபுணர்களின் குழாமொன்று இச்செயலமர்வில் வளவாளர்களாக செயற்படுகின்றது.

உண்மையைக் கூறுதல், நல்லிணக்கம், நினைவுகூர்தல் மற்றும் ஏனைய வடிவங்களிலான வரலாற்று ரீதியான நினைவுச் சின்னங்கள்,
நிலைமாறு கால நீதி நோக்கங்களுக்கென மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துதல்.

காணாமல் போயிருக்கும் நபர்கள் மற்றும் தலைமறைவாகியிருக்கும் நபர்கள் ஆகியோர் தொடர்பாக தடய அறிவியல் பகுப்பாய்வுகள் மற்றும் ஏனைய முயற்சிகள் என்பவற்றை மேற்கொள்ளல்.

நீதியை அணுகுவதற்கான வாய்ப்பினை விருத்தி செய்தல், உளவியல் ஆதரவினை வழங்குதல் மற்றும் கடும் மன அதிர்ச்சியினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் இணைந்து பரப்புரை செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளை மேம்படுத்துவதற்கென சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், சிவில் சமூக அமைப்புக்களுக்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, அத்தகைய தரப்புக்களின் இயலளவினை கட்டியெழுப்புதல்.
இழப்பீட்டு நீதி முன்முயற்சிகள், இத்தகைய செயன்முறைகள் அனைத்திலும் பால்நிலை ரீதியான நீதியை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பனவாகும்





SHARE

Author: verified_user

0 Comments: