மட்டக்களப்பு - வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ரெதிதென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள ரெதிதென்ன பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு விவசாயிகள் படுகாயமடைந்து வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
வயல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவரே தலைக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.
அவ்வேளையில் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் கடமையிலீடுபட்டிருந்த மோட்டார் போக்குவரத்து பொலிஸாரை அவர்கள் அவதானித்ததும், தலைக்கவசம் இல்லாததால் பதற்றமடைந்து கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையிலிருந்து உள் வீதி ஒன்றுக்குள் திரும்பிய வேளையில் பின்னால் வந்த வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை மாலை ரெதிதென்னப் பகுதியில் எல்ப் ரக பாரஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்களும் பலியாகியிரருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment