30 Aug 2016

அகில இலங்கை ரீதியிலான கிழக்குமாகாண முதலமைச்சர் வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

SHARE
அகில இலங்கை ரீதியிலான கிழக்குமாகாண முதலமைச்சர் வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலய
விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உரையாற்றுகையில் இந்த மாவட்டத்தில் தசாப்தங்கள் கடந்து அரசியல்வாதிகள் அதிகாரம் வகித்தீர்கள் என்னதான் செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியினை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில்...ஏறாவூரின் பழம்பெரும் பாடசாலையின் மைதானமாக இது காணப்படுகிறது. இம்மைதானத்தில் எத்தனை விழாக்கள் இடம்பெற்றிருக்கிறது. எத்தனை முறை இங்கே வந்திருந்து பேசிவிட்டுப் போயிருக்கிறீர்கள். இந்த மைதானத்தில் அமைந்திருக்கும் இந்த பார்வையாளர் மண்டபத்தினைப் பார்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கிறது. யுத்தகாலத்தில் அகப்பட்ட கட்டிடம் போன்று கூரைகள் ஓட்டையாகவும், உடைந்த துண்டுகளாகவும் காணப்படுகிறது. அதனை செய்து கொடுக்க யாரும் இதுவரை முன்வராததன் காரணம் என்ன. ஊரில் இருக்கும் பாடசாலைகளுக்குப் பெயர்வைத்து திரிகின்றவர்கள் இதனையும் பார்த்து செய்திருக்க வேண்டும் என்டு கடுந்தொணியில் தெரிவித்தார்.
மேலும் இந்த வெற்றிக்கிண்ணம் இம்மாதம் நான்காம் திகதி முடிவுற இருக்கிறது. அதற்க்கு முன்னர் இந்த மைதானத்தை சிறப்பாக அமைத்துத் தருவதது எனது கடமை நான் இன்றுதான் முதன்முதலாக இங்கே வந்திருக்கிறேன். இதற்கு முதல் இத்உ சம்மந்தமாக யாரும் என்னிடம் கூறவுமில்லை நான் இங்கு வரவுமில்லை எனவே இப்படியாக சேவைகளை இளைஞர்களின் நலன் கருதி உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டிய இன்றைய அரசியல்வாதிகளின் முக்கிய கடமை என்றடிப்படையில் இதனை சம்மந்தப்பட்டவர்கள் செய்யவில்லை என்றால் எனது பணத்திலாவது குறிப்பிட்ட நான்கு நாட்களுக்குள்ளேயே முடித்துத் தருவேன் என்று குறிப்பிட்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: