14 Aug 2016

அப்பா வீடுவருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் எனது பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழை என்னால் காண்பிக்க முடியாது.

SHARE
எனது கணவர் ஒரு சமூர்தி முகாமையாளராக கடமை புரிந்து வந்தவர் இந்நிலையில்தான் கடந்த 2009 ஆம் அண்டு எனது வீட்டிலிருந்தவாறுதான் கடத்திச் செல்லப்பட்டார். தற்போது நான் எனது 2 பிள்ளைகளுடனும் மிகுந்த கஸ்ற்றத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றேன். காணாமல் போன எனது கணவர் தொடர்பில் எதுவித தகவல்களும் இன்றித் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் எதுவித வருமானமுமின்றி வாழ்ந்து வருகின்றேன். எனது தகுதிக்குறேற்ற ஓர் தொழில் வய்ப்பையாவது அரசாங்கம் பெற்றுத்தந்தால் அதில் கிடைக்கும் வேதனத்திலாவது எனகு பிள்ளைகளை வளர்க்கமுடியும்.

என  மட்டக்களப்பு மகிழூரைச் சேர்ந்த சிறிதேவி என்பவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் வெள்ளிக் கிழமை (12) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……

காணாமல்போன எனது கணவருக்காக வேண்டி மரணச்சான்றிதழ் தருவதென்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாதுள்ளது. எனது கணவர் காணாமல் போய்விட்டார் என்பதையாவது உறுத்திப்படுத்தித் தந்தலாவது எனது மனத்திற்கு ஓரளவு அறுதலாக இருக்கும். இதனைவிடுத்து மரணச்சான்றிதழ் வருவதென்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. அப்பா வீடுவருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் எனது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழை என்னால் காண்பிக்க முடியாது. எனது கணவர் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற பதிலைக்கூட எனது பிள்ளைகளுக்கு வழங்க முடியாத திண்டாட்டத்தில் வாழ்கின்றேன்.

எனது கணவரின் உழைப்பில் வாழ்ந்து வந்த நாம் தற்போது வருமானமிழந்து நிக்கின்றோம். இந்நிலையில் எனக்கு ஓர் தொழில்வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தித்தர வேண்டும்.

கிராமப் புறத்தில் வாழ்ந்து வரும் நாம் எமது பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு எங்கள் பிரதேசங்களில் காரியாலயங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் அலுவலகங்கள் மொழிரீதியாக எதுவித பிரச்சனைகளும் ஏற்படாத விதத்தில் நாம் இலகுவில் சென்றுவரக் கூடிய வித்தில் நம்பிக்கைத் தன்மை வாய்ந்ததாக எமது பகுதியில் குறித்த காரியாலயம், அமையப்பெற வேண்டும்.

எனது கணவர் காணாமல் போனதிலிருந்து பலரிடமும் பல முறைப்பாடுகளைச் செய்துள்ளேன், இங்கு வருவதற்குக்கூட எனக்கு விருப்பம் இல்லாமல்தான் கலந்து கொண்டிருக்கின்றேன் ஏனெனில் எத்தனையோ பல முறைப்பாடுகள் செய்தும் இதுவரை எனக்கு எந்துவித சாதக பதில்களும் கிடைக்கவில்லை என அவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: