16 Aug 2016

சிறுபான்மையினங்களைச் சிறுமைப்படுத்தும் மனோநிலையை மாற்ற வேண்டும். வாகரை கிராமவாசி

SHARE
“இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களைச் சிறுமைப்படுத்தி இரண்டாம் அல்லது மூன்றாந்தரப் பிரஜைகளாகக் கையாளும் மனோநிலையை மாற்ற வேண்டும் என மட்டக்களப்பு
வாகரை கதிரவெளி கிராமவாசியான கணபதிப்பிள்ளை லோகநாதன் (வயது 49) வேண்டுகோள் விடுத்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 16, 2016) வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் வசிக்கும் மக்கள்   செயலணியின் முன் ஆஜராகி பிரதேச மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட லோகநாதன்

இந்த நாட்டில் சிறுபான்ம சமூகங்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மை இனத்தவர்களான படையினரும் பொலிஸாரும் தெருவில் நிறுத்தி அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் போது எங்களின் மனதில் ஒருவித அவமானகரமான உணர்வு தோன்றுகிறது.

இந்த நிலை இனிமேல் இந்த நாட்டில் வராது விட்டால்தான் நல்லிணக்கத்துக்கான மரம் துளிர்விடுகிறது என்று நம்பலாம்.
கடந்த காலத்தில் நடந்தவைகளை இன்னும் மனதில் சுமந்து கொண்டு பலர் நடைப்பிணங்களாக வாழ்கின்றார்கள். மேலும் பலர் நொந்து போய் மடிந்தே விட்டார்கள்.

துயரச் சுமைகளை முழுமையாக வெளியில் விடுவதற்கான சந்தர்ப்பம் இப்பொழுதும் வந்து விட்டது என்று களிப்படைந்து விட முடியாது.
நடந்தவற்றை வெளியில் சொன்னால் நாளை நானும் காணாமல் போகலாம் என்ற அச்சம் நீங்கவில்லை.

இலங்கையில் இனப்பாகுபாடு இனிமேல் நிலவக் கூடாது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நாடு சொந்தமென்ற செய்தியை உண்மைப்படுத்திக் காட்டவேண்டும்.

தமிழரும் முஸ்லிமும் சிங்களவரும் ஏன் சம அந்தஸ்துள்ள கௌரவமான ஜனாதிபதிகளாக இருந்து நாட்டை சமாதானத்தை நோக்கி நகர்த்த முடியாது.? இது கனவுதான்.

இது நல்லாட்சி என்று சொல்வதற்கு எம்மால் முடியாது, ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களது பார்வையில் இன்னமும் எந்தவித மாற்றமும் ஏற்படவ்pல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அநியாயம் இழைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.” என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: