மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர், மீராகேணி, பஸீர் சேகுதாவூத் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள வீடொன்றின் விறாந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுக்குத் தீ வைக்கப்பட்டதால் அது முற்றாக எரிந்து விட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இ;சம்பவத்தில் மீராகேணியைச் சேர்ந்த பதுர்தீன் அஜ்மீர் என்பருக்குச் சொந்தமான“பெஷன் பெலஸ்” ரக மோட்டார் சைக்கிளே தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment