என வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பெரியதட்டுமுனைக் கிராமத்தில் வசிக்கும் செல்லையா வெள்ளக்குட்டி (வயது 72) தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 16, 2016) வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் செயலணியின் முன் ஆஜராகி பிரதேச மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட அவர் ஒருவர் தனக்கு விரும்பிய மதத்தை பின்பற்றி வாழ்வதற்கும் வழிபடுவதற்கும் அவருக்கு அரசியலமைப்பின்படி பூரண உரிமை உண்டு.
ஆனால் நாட்டில் தற்போது உருவெடுத்துள்ள மதவெறி என்பது தொற்றுநோயாகவும், சிலபோது புற்றுநோயாகவும் பரவி வருகின்றது.
எவ்வாறெனினும், எங்களைப் போன்றவர்களின் வாழ்நாள் பெரும்பாலும் முடிந்து விட்டது என்றாலும், இந்த நாட்டில் இனி வாழப்போகும் இளம் சந்ததிக்கு இந்த மதவெறி என்பது ஒரு அச்சுறுத்தலாகவும் அமைதியை விரும்பும் இந்த நாட்டுக்கு அவமானகரமானதாகவும் இருந்து வருகின்றது.
ஆகையினால், இந்த நாடு மதவெறிச் தீச்சுவாலையால் சாம்பலாவதற்கிடையில் எந்த மதத்தையும் எவரும் பின்பற்றி வாழலாம் என்ற நல்ல செய்தியை நல்லிணக்க பொறிமுறைக்கூடாக மீண்டும் உறுதிப்படுத்துமாறு மன்றாடுகின்றேன்.”
மேலும், இந்த நாட்டின் அழகு சிங்களமும், செந்தமிழும் கலந்து பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற ஒரு கொடியில் பூத்த மலராக இருக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment