கடந்த 30 வருட காலமாக போராட்டத்தில் சிக்கித்தவித்த தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் அரசு எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால்தான் கடந்த காலதத்தில் இலங்கையில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புன்றார்கள்.
வெளிநாடுகளிலுள்ள சட்ட நிபுணர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள் போன்றோர்கள் அக்குழுவில் இடம்பெறுவதுதான் மிக நன்று. இலங்கையிலிருந்து இவ்வாறானதொரு குழு உருவாக்கம் பெற்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு ஏதாவது ஓர் பாதிப்பு வந்திடுமோ என்ற நோக்கில் விசாரணைகள், மற்றும் தீர்வுகளும், மாற்றம் பெறும் சந்தர்ப்பம் இருக்கின்றது. இவைகளை கருத்தில் கொண்டுதான் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் உள்வாங்க வேண்டும் என கருதுகின்றோம்.
என முன்னாள் போராளியான நியூசன் போல் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக் கிழமை (12) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணி அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
யுத்த கழகத்தில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை பார்க்க வேண்யடிதில்லை யுத்த கழத்தில் இருசாராருக்கும் பாதிப்பு வருவதென்பது வழமையானமாகும், ஆனால் திட்டமிட்ட அழிப்புக்களுக்கும், சத்தித் திட்டங்களுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும், அவற்றுக்குரிய தீர்வுகள் கிடைக்கத்தான் வேண்டும்.
கடந்த போராட்டத்தில் 90 வீதம் பாதிப்படைந்தவர்கள் தமிழ் மக்கள்தான் கால் கைகளை இழந்து போயும் தொழில் வாய்ப்பின்றியும் பல முன்னாள் போராளிகள் உள்ளார்கள் இவ்வாறானவர்களுக்கு அரசாங்கம் அரச தொழில் வாய்ப்புக்களையோ அல்லது வேறு ஏதாவது தொழில் வசதிகளையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எனவே அரசாங்கம் இனிமேலும் இன வேறுபாடுகள் காட்டாமல், பாதிக்கப்பட்டுப்போயுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாழ்ப்புக்களை ஏற்படுத்தி மேலும் அசாதாரண நிலைக்கு இட்டுச் செல்ல இடமளிக்கக் கூடாது.
முஸ்லிம் மக்களையும் உள்வாங்கி முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும் ஆராய்ந்து அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும், ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள், ஆனால் சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகளினால்தான் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்குமிடையில் விரிசல் வருகின்றன. எனவே மக்களோடு மக்களாக இருந்து இனவாதத்தைத் தூண்டாத செயற்பாடுகளில் ஈடுபடும் சமூகத் தலைவர்களை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அரசியல் வாதிகளைத் எதிர் காலத்தில் தெரிவு செய்ய வேண்டும்.
2003 இற்கு முற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் போராளிகளும் இருந்துள்ளார்கள். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த ;. முஸ்லிங்களும் உள்ளார்கள். முஸ்லிங்கள் போராட்டத்தில் இணைந்திருந்ததை அப்போதிருந்த சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் காரணமாகவே அவை தப்பாதன அபிப்பிராயமாகக் கொண்டு வந்தர்கள். எனவே தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும். அதுபோல் சிங்கள் மக்களும் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டால்தான் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரத்தீர்வைப் பெற்றுக் கொள்ளாலாம்.
அடுத்து தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும், சிங்கள மக்கள் தமிழ் படிக்க வேண்டும், சிங்கள மக்கள தமிழ் படிக்காமல் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்பது அநீதியான செயற்பாடாகும். என்னைப் பொறுத்தளவில் இந்த நாட்டிலே இரண்டு இனங்களும், 2 மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எனது பார்வையில் 4 மதங்களும், 2 மொழியும்தான் இந்ந தாட்டில் உள்ளன. தமிம் பேசும் மக்களும். சிங்களம்பேசும் மக்களும்தான் இந்த நாட்டில் உள்ளார்கள். இதனை விடுத்து தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், பறங்கியர், சிங்களவர்கள் என பிரித்துப்பார்த்து பாகுபாடு காட்டி, கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றார்கள்.
எமக்கு ஏதும் பிரச்சனைகள் வாந்தலும் அவர்களது உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும் சிங்கள மக்களும் உள்ளார்கள். சிங்கள மக்கள் அனைவரும் கெட்டவர்கள் எனவும், அனைவரும் நல்லவர்கள் எனவும் கூற முடியாது அதுபோல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அனைவரும் கெட்டவர்கள் என்றோ கூறமுடியாது.
தமிழ் மக்களின் Nவைலகள் என்ன என்பதை அறிந்து அவற்றை அரசாங்கம் ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருந்தால் கடந்த போராட்டம் இந்த அளவிற்கு வந்திருக்கமாட்டாது, அழிவுகளும், இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கமாட்டாது. இவைகளனைத்தும் விட்டுக்கொடுப்பின்னையாலேயே ஏற்பட்டிருந்தன. எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து பிரச்சனைகளுக்கு இனிமேலாவது தீர்வு காணப்பட வேண்டும். எனவே மேலும் பிரச்சனைகளை விஸ்த்தரித்துக் கொண்டு போனால் இந்த நாட்டை வேறு ஒரு நாட்டவர்தான் ஆளும் நிலமை மாறும் எனவே இந்த இலங்கை நாட்டை சிங்கள மக்களும். தமிழ் பேசும் மக்களும் ஆழ வேண்டும் என்பதையே நாம் எதிர் பார்க்கின்றோம்.
கடந்த காலப் பிரச்சனைகளை மீண்டும் கிழற ஆரம்பித்தால் அதற்கு முடிவு காணமுடியாது. அதனை விடுத்து தற்போதைய காலகட்டத்தில் எவை தேவையோ அவற்றை ஆராய்ந்து நிவர்த்தில் செய்ய வேண்டும் சிங்கள மக்கள் அவர்களின் இராணுவ வீரர்கள் மரணித்த தினத்தை அனுஸ்ட்டிக்கின்றார்கள். அதுபோல் தமிழ் மக்களின் போராளிகள் மரணித்த தினங்களை அனுஸ்ட்டிப்பதற்கு யாரும் தடை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment