6 Aug 2016

சிறுவர்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமைவது பாலர் பாடசாலைகளே - தங்கவேல்

SHARE
சிறுவர்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமாக அமைவது பாலர் பாடசாலைகளே அதனை மேம்படுத்துவது ஒவ்வொரு பெரியவர்களின் கடமையுமாகும்
என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புளியந்தீவு பிரதேசத்தில் சிறந்து விளங்கும் பாலர் பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழும் மோனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிநிகழ்வு வெள்ளிக்கிழமை (05) மட்.ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் பாலர் பாடசாலையின் பிரதம ஆசிரியை திருமதி புஸ்பராணி லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக புளியந்தீவு புனிதமரியாள் பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்கலஸ் யூட் அடிகளார், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்தியகலாநிதி கே.ஈ. கருணாகரன், கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் த. தங்கவேல், கிழக்கு மாகாணபாலர் பாடசாலைகள் கல்விப் பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் மலர்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது சின்னஞ் சிறார்களின் கழிப்புமிகு விளையாட்டுகளும் வினோத உடைப் போட்டிகள் என பலநிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் சிறப்புரையாற்றும் போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போதுஅவர் மேலும் கூறுகையில்,

அரசனுக்குதன் நாட்டில் மாத்திரமே சிறப்புகற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கின்ற ஒளவையின் கூற்றுக்கிணங்க மழலைச் செல்வங்களை கல்விக்காக தயார்ப்படுத்தும் மோனிங்ஸ்டார் போன்ற இவ்வாறான பாலர் பாடசாலைகளின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது.

மாணவர்களின் வளர்ச்சிக்குகல்வி மட்டுமே போதுமானதல்லஅவர்கள் உடல் ரீதியில் உற்சாகமாக இருப்பதற்கும் மனரீதியில் மகிழ்வுடன் இருப்பதற்கும் உகந்ததான இவ்வாறான விளையாட்டுப் போட்டிநிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் செயற்படுத்தி அவற்றின் மூலம் அவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

ஒருகட்டிடம் கட்டுவதற்கு அடித்தளம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மாணவர்களின் கல்விக்கு அடித்தளம் இடும் பாலர் பாடசாலைகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதும் அவற்றை ஊக்குவிப்பதும் பெரியவர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.

பாலர் பாடசாலைகளில் பிள்ளைகளின் வினைத்திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை ஆரம்பகல்விக்கு தயார்ப்படுத்தும் செயற்பாடுகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாத்திரமன்றி பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டோம் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடாமல் அவர்களை வீட்டில் வைத்து கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்றவர்களாகஉருவாக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே நாம் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை மிகவும் சிறந்த முறையில் சீர்ப்படுத்தி அவர்களை சிறந்ததொரு கல்விமான்களாக உருவாக்கி எமது சமுகத்தினை உயர்த்தமுடியும் என்று தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: