கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும்
வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன் சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும், சுற்றிவர வாவியும் சுனைகளாலும் சூழப்பட்டு இயற்றை
வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன் சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும், சுற்றிவர வாவியும் சுனைகளாலும் சூழப்பட்டு இயற்றை
அன்னையின் சுரங்கமாய் திகழும் பழம்பெரும் பதியாம் பழுகாமம் தனில் வீற்றிருந்து நாடிவரும் அடியார்குறை தீர்க்கும் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையாரின் துவஜாரோகண மஹோற்சவப் பெருவிழா 26.08.2016ம் திகதி திருக்கொடியேற்றம் மிகவும் விமர்சையாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.; இதில் அதிகளவான பக்தர்கள் கலந்து மாவேலனின் அருளாசியினை பெற்றனர்.
எதிர்வரும் 05.09.2016 அன்று காலையில் பஞ்சமுக விநாயகன் தேரிலேறி மக்களுக்கு அருளாட்சி வழங்கும் அற்புதமான தேரோட்ட நிகழ்வு இடம்பெற்று 06.09.2016 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.
0 Comments:
Post a Comment