(ராஜ்)
திருகோணமலையில் செயற்பட்டு வரும் தனியார் கல்வி
நிலைய உரிமையாளர்கள் மற்றும் அசிரியர்களிடையே மோதல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு
தனியார் கல்வி உரிமையாளர்கள் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதில்
காயமடைந்த
ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது நீண்டகாலமாக முகப்புத்தகத்தில்
பதிவு செய்யும் கருத்துப் பதிவுகளில் மூண்ட பகையானது முற்றியதன் காரணமாக லிங்கநகரில்
உள்ள இன்னுமொறு தனியார் கல்வி உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து 6 பேர் கொண்ட குழுவால்
இந்த தாக்குதல் இடம் பெற்றது இதில் காயமடைந்த தனியார் கல்வி உரிமையாளரும் அவருடைய மனைவியான
தேசிய நாளிதழில் ஒன்றின் பெண் ஊடகவியளாரும் தாக்கப்பட்டு அவருடைய மோட்டார் சைக்கிலும்
சேதமடைந்துள்ளது.
அந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஊடகவியலாளரின்
கணவனான தனியார் கல்வி நிலைய உரிமையாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற
உறுப்பினரும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரும் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 4 பேரையும் கைது
செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் செய்தள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்
ஊடகவியலார் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது
0 Comments:
Post a Comment