9 Aug 2016

தும்பங்கேணியில் மீன் அறுவடை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின் தும்பங்கேணிக்
குளத்தில் மீன் அறுவடை திங்கட் கிழமை (08) நடைபெற்றது.

தும்பங்கேணி வளர்பிறை மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் ந.விஜயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கூட்டுறவு ஆணையாளர் திவாகர சர்மா, மீன்பிடி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இக்குளத்தில 135000 மீன்குஞ்சிகள் விடப்பட்டிருந்தன. இக்குத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் கோள்ட்டன், கணையான், மற்றும் விரால் போன்ற மீனினங்கள் குளகடகரையில் வைத்தே பொதுமக்களுக்கு 200 தொடக்கம் 250 ரூபாவிற்கு விற்றப்படுவதாகவும், ஆனால் வெளி வியாபாரிகளிம் 300 தொடக்கம் 350 ரூபாவுக்கு  ஒரு கிலோகிராம் மீன் மக்கள் கொள்வனவு செய்வதாகவும் இதன்போது தும்பங்கேணி வளர்பிறை மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் ந.விஜயராசா தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: