7 Aug 2016

தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை கொடுக்காததன் விளைவாகத்தான் இளைஞர்கள் ஆயும் ஏந்தினார்கள் - கிருஸ்ணபிள்ளை.

SHARE
காடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை கொடுக்காததன் விளைவாக அதனைப் பெறுவதற்கே எமது தமிழ் இளைஞர் யுவதிகள்
ஆயும் ஏந்தினரேஒளிய நாட்டினை துண்டாடுவதற்கு அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.


200 மீற்றர் நீளம் கொண்ட களுவாஞ்சிகுடி மணல் வீதி 4307100 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வடிகானுடன் கொங்கிறீட் வீதியாக செப்பனிடுவதற்குரிய அங்குரார்ப்பண வேலைகள் உத்தியோக பூர்வமாக சனிக்கிழமை (06)  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்… 

எமது மாவட்டம் அனைத்து அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் மட்டுமின்றி முன்னைய அரசாங்கங்களினால் அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டிருந்த ஒரு மாவட்டமாகும் அந்ந நிலை நல்லாட்சி அரசில் மாற்றம் அடைய வேண்டும் எனவே எமது மாவட்டத்தில் காணப்படும் வீதிசம்பந்தமான பிரச்சினைகளை நிறைவேற்றி தரவேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒரு தாயின் வயிற்றில் இருந்து வந்தவர்கள்தான் எனவே மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டு வாழ்கின்றோமே தவிர நாம் அனைவரும் மனிதர்கள் இந்தியாவினை சிந்தித்து பாருங்கள் எத்தனை கோடி மக்கள் எத்தனை மதங்கள் எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், அவர்கள் அனைவரும், இந்தியன் என்ற உணவோடு வாழ்கின்றார்கள் ஆனால் இரண்டு கோடி வாழுகின்ற நம் நாட்டில் ஏன் நாங்கள் ஒருமித்து வாழ முடியாதுள்ளது.

இதனால்தாக் சொல்லுகின்றேன் தமிழ்த் தலைவர்களாக இருக்கலாம், சிங்களத் தலைவர்களாக இருக்கலாம், முஸ்லிம் தலைவர்களாக இருக்கலாம், அனைவரும்  இனமத பேதமற்ற சேவையினையும், அரசியலினையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளுகின்ற பட்சத்தில் ஒற்றுமையான நாட்டினை உருவாக்க முடியும் அதனை விடுத்து அரசியல் தலைவர்கள் தங்களது பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக தேர்தல் காலங்களிலே இனவாதத்தினை கக்கி நாட்டினை பிரிவினை வாதத்துக்குள் தள்ளுகின்றனர் இதனால்தான் இந்த சிறிய நாட்டுக்குள் இனங்கள் விட்டுக் கொடுப்பின்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலகத்தில் வாழுகின்ற மக்களிடையே ஓடுவது ஒரே இரத்தம் இனரீதியாக இரத்தம் ஓடவில்லை எனவேதான் நான் கூறுகின்றேன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர் ஜனாதிபதி, பிதைமரிடம் எடுத்துச் கூறுங்கள் இந்த நாட்டில் பெரும்பான்மை இனம்போன்று சமமாக வாழ்வதற்கு உரிய உரிமை எமது மக்களுக்கு உண்டு, எனவே பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி, பண்பாடு, கலாசாரம், போன்ற அந்தஸ்துக்கள் அனைத்திலும் சம உரிமை எமது தமிழ் மக்களுக்கும்  வழங்கப்பட வேண்டும். எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது இவை போன்ற உரிமைகள் தொடர்ச்சியாக எமது மக்களுக்கு மறுக்கப்பட்டதன் காரணத்தினால்தான் ஆயுதமேந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்தார்களே தவிர நாட்டினை பிரித்து துண்டாக்குவதற்கல்ல இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான தவறுகளை விடுவதற்கு இடமளிக்கக்கூடாது அதுமாத்திரமின்றி  முன்னை சூழல் போன்று ஒரு சூழலை தற்காலத்தில் ஏற்பாடாமல் இருப்பதில் தற்போதைய அரசு கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: