(டிலா )
தாய்ப்பால் ஊட்டுவதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் முன்னேடுக்கப்படும் தேசிய 'தாய்ப்பால் ஊட்டல்' வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும் விளக்கமளிக்கும் செயலமர்வும் ( 23.04.2016) தாய் சேய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம்.ஏ.சி.எம்.பஸால் தலைமையில் நடைபெற்றது.
இங்கு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்;
முதல் ஆறு மாதங்கள் முடியும் வரை தனித்தாய்ப்பால் மட்டும் வழங்கப்பட்ட குழந்தைகள் தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தைகளை விட 14 மடங்கு உயிர் வாழும் ஆற்றலை கொண்டுள்ளனர்.
குழந்தைகளின் இறப்பு வீதத்தை குறைப்பதிலும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதிலும், அவசியமான உயிர்ச்சத்துக்களை வழங்குவதிலும் தாய்ப்பால் பெரும் பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் கற்கும் ஆற்றல், மூளைத் திறன் விருத்திசெய்யும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. குழந்தையின் வாழ்வில் நிலையானதும் சிறப்பானதுமான ஆரம்பத்தை தாய்ப்பாலூட்டல் உறுதிப்படுத்துகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். இன்று நமது நாடு தாய்ப்பால் ஊட்டுவதில் உலகளாவிய நீதியில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
இதில் வைத்திய அதிகாரிகள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment