9 Aug 2016

மட்டு. பொருளாதார மத்திய நிலையம். மாகாண சபையில் தனிநபர் பிரேரணை.

SHARE
(பழுவூரான்)

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.  08.08.2016 போரதீவுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில் வளர்பிறை நன்னீர் மீன் அறுவடை விழாவின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கே அவர் உரையாற்றுகையில், 
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன். அதாவது,; மூன்று மாவட்டங்கள் உள்ள இந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரவரும் வருடம் மத்திய அரசாங்கத்தினூடாக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைக்க நான் எதிர்வரும் 25.08.2016 அன்று இடம்பெறும் மாகாண சபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டு வரவுள்ளேன். 

இறைவனின் ஆசியால் அது ஏகமனதாக நிறைவேற்றப்படும் என நினைக்கின்றேன். அதனூடாக அடுத்த வருடத்திலாவது கிழக்கு மாகாணத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு எங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் அங்கு நல்ல விலைக்கு சந்தைப்படுத்தப்பட வேண்டும். இந்த பொருளாதார மத்திய நிலையம் எமது மாவட்டத்தில் அமையுமாக இருந்தால் நுகர்வோர் கூட வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களை குறைநந்த விலையில் பெற்றுக் கொள்வது மாத்திரமல்லாமல் எங்களது பிரதேசங்களில் விளையும் விவசாய உற்பத்திப்பொருட்கள், மீனுற்பத்திப் பொருட்களோ நல்ல விலையில் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு வரும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். என தெரிவித்தார்.

இந்த சிறிய குளத்தினுள்ளே ஏராளமான முதலைகள் கிடப்பதாக மீனவர்கள் வந்தவுடனேயே விசனம் தெரிவித்தார்கள். உண்மையிலே இது கடந்த ஜனவரி 08ம் திகதிக்கு முற்பட்ட கொடூர ஆட்சியின் பிரதிபலனாகும். ஏனென்றால் அந்த கொடூர ஆட்சிக் காலத்தில் கிட்டங்கிப் பாலத்திலே முதலைகளை பெரும்பாண்மை இனத்தவர்கள் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் அங்கே இறக்கி விட்டதை மக்கள் கண்ணூடாக பார்த்திருக்கின்றார்கள். அதேவேளை எங்களது பிரதேசத்திலே காலிலே சங்கிலி கட்டப்பட்ட நிலையில் யானைகள் நடமாடுவதையும் மக்கள் கண்டுள்ளார்கள். இதனூடாக என்ன விளங்குகின்றது என்றால் யானைகளைக் கொண்டு செய்யப்பட்ட வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்தமையினால் பயன்படுத்தப்பட்ட யானைகள் எமது பிரதேச காடுகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற கொடூர ஆட்சியினால் செய்யப்பட்ட அறுவடை தான் இந்த முதலை அறுவடை. இந்த முதலைகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதனை கூறியுள்ளேன்.  

இந்நிழ்வில் விவசாய மற்றும் நன்னீர் மீன்பிடி துறை அமைச்சர் கி.துரைராசாசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞ.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா மற்றும் மாகாண மீன்பிடி பணிப்பாளர், கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், கூட்டுறவு ஆணையாளர், திட்ட விரிவாக்கல் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என பலரும் கலந்துகொண்டனர். 





SHARE

Author: verified_user

0 Comments: