தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு வகையில் அரசியல் தீர்வையும் மற்ற வகையில் மக்களின் அபிவிருத்திகளையும்
பார்க்க வேண்டியதாகவுள்ளது. இதன் நிமிர்த்தமாகத்தான் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் மறைமுகமாக ஆதரவைக் கொடுத்துள்ளோம். எனவே கடந்த கால யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள எமது மக்களின் தேவைகளை பூர்தி செய்ய நாம் இயன்றவரை முயற்சி செய்கின்றோம். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யேகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோ ரலன் எனும் தொணிப் பொருளின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் பிரஜைகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பொரியபோரதிவு பாரதி முன்பள்ளி பாடசாலைக்குரிய சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28) பெரியபோரதீவு பாரதி இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.டினேஸின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்….
ஒரு நாட்டில் முதுகெலும்பு இளைஞர்கள்தான் எனவே எமது பெரியோர்கள் இளைஞர் சமுதாயத்தை நல்லமுறையில் நடாத்தி அதனூடாக நல்ல வருங்கால தலைவர்களை உருவாக்க வேண்டும். தேசிய இளைஞர் சேவை மன்றம் இளைஞர்களுக்கு வழிகாட்டினாலும் அவற்றை நல்லுமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கையிலேயே தங்கியுள்ளது.
எமது இளைஞர்கள் திறமையானவர்கள், முன்னுதாரணமாகச் செயற்படக் கூடியவர்கள், இவ்வாறானவர்களுக்கு நாமும் பல உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கும் உள்ளது. யுத்த சூழலினால் பாதிப்புற்றுள்ள எமது பிரதேசங்களை வளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே கிராமங்களிலுள்ள இளைஞர் கழகங்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களுக்குள் செய்ய வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கு தெரியப்படுத்துங்கள். அவ்வாறான செயற்றிட்டங்களுக்கு எங்களாலான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள், கொடுப்பனவுகள், உள்ளிட்ட இதர உதவிகள் வழங்கும்போது அரச அதிகாரிகள் அல்லது ஏனைய உத்தியோகஸ்தர்கள் மக்கள் மத்தியில் பாராபட்சம் காட்டி நடந்தால் உடன் எமக்கு தெரியப்படுத்துங்கள் நாம் அவற்றை நிவர்த்தி செய்யக் காத்திருக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு வகையில் அரசியல் தீர்வையும் மற்ற வகையில் மக்களின் அபிவிருத்திகளையும் பார்க்க வேண்டியதாகவுள்ளது. இதன் நிமிர்த்தமாகத்தான் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் மறைமுகமாக ஆதரவைக் கொடுத்துள்ளோம். எனவே கடந்த கால யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள எமது மக்களின் தேவைகளை பூர்தி செய்ய நாம் இயன்றவரை முயற்சி செய்கின்றோம்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியகளிக்க பயந்துபோயிருந்தார்கள். இப்போது அவ்வாறான பயத்திற்கு இடமில்லை மீண்டும் புலாய்வாளரல்களின் அச்சுறுத்தல்கள் வந்தால் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை மற்றுக்கப்பட்டால் எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். எமது மக்களை காணாமலாக்கியவர்களும் தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பில் முலைக் கணீர் வடிக்கின்றார்கள்.
காணாமலாக்கப் பட்டவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தினால் பத்திரம் வழங்கப்படவுள்ளது அந்தப் பத்திரம் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் கண்டறிவதற்கு ஆதாரமாக அமையும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment