9 Aug 2016

கடந்த காலங்களில் மட்டு.படுவான்கரை மக்கள் பல இன்னல்களைச் சந்தித்தித்தனர்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்கள் கடந்த காலங்களில் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தவர்கள் இவ்வாறானவர்களின் தேவைகளை
அனைவரும் ஒருமித்து பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தும்பங்கேணி குளத்தில் திங்கட் கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட நன்னீர் மீன் வளப்பு அறுவடை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்… 

பாலுற்பத்தி, மீன் உற்பத்தி, நெல்லுற்பத்தி, செங்கல் உற்பத்தி, மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளென அதிகளவு உற்பத்திகள் விளைகின்ற புமிதான் இந்த படுவான்கரைப் பிரதேசமாகும். இருந்த போதிலும் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலையில் விற்று விட்டு மீண்டும் அதே பொருட்களை பிறரிடமிருந்து அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்கின்றார்கள். இதனால் நமது பொருhதாரம் ஏங்கேயோ போய்நிற்கின்றது. இந்த நிலமை மாற்றமடைய வேண்டும். 

கடந்த காலங்களிலிருந்து இப்பகுதி பல மக்கள் கஸ்ட்டங்களை எதிர் கொண்டு வந்தாலும், தொடர்ந்து வறுமை, வறுமை, எனக் கூறிக் கொண்டு வருவதை விடுத்து வறுமையிலிருந்து எவ்வாறு மீழலாம் என்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.வறுமையிலிருந்து மீள்வதற்கு தனி தபர் உட்பட சங்கங்கள், பொது அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். 

படுவான்கரைப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், சிறிய நன்நீர் மீன்பிடிக்குளங்களில் முதலைகளின் அட்டகாசங்களும் அதிகதித்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முதலைகள் மீன்களை மாத்திரம் உண்பது மாத்திரமல்ல மனிதர்களையும் தாக்குகின்றன எனவே நாம் முதலைகளுக்கு தீனிபோடாமல், வன விலங்கு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அவ்வாறான முதலைகளைப் பிடித்து ஆறுகளில் விடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: