(க.விஜி)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையும், வேள்ட் விஷன் நிறுவனமும் கூட்டாக இணைந்து வறுமைப்பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் எதிர்வரும் புலமைப்பரீட்சையில்
தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மண்டூர் இராமகிருஸ்ணன் மிஷன் பாடசாலை மண்டபத்தில் திங்கட் கிழமை (01) அதிபர், திருமதி.அ.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலளார் அ.தவராஜா, சனசமூக உத்தியோகத்தர் மயில்வாகனம் கருணாநிதி, அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வளவாளர்களாக ஆசிரியர்களான எஸ்.செல்வராஜா, எஸ்.ஜெயா ஆகியோர்கள் கலந்து கொண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரீட்சை சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கமளித்தனர்.
மண்டூர் இராமகிஸ்ணன் மிஷன் பாடசாலை, மண்டூர் மகா வித்தியாலயம், பாலமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தம்பலவத்தை கணேச வித்தியாலயம், கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சங்கர்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய 06 பாடசாலையைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்த விசேட புலமைப்பரீட்சை செயற்றிட்டத்தில் கலந்து கொண்டு பயடைந்தனர்.
0 Comments:
Post a Comment