கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சரும் ஹபீஸ் நசீர் அஹமத் அவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சித் தொண்டர்கள் மற்றும் முதலமைச்சரின் செயற்பாட்டுக்குழுவினருக்குமான
சந்திப்பு ஏறாவூர் குல்லியதுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஏறாவூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.முகயதீன் பாவா தலைமையில் திங்கட் கிழமைஇரவு (29) இடம்பெற்ற போது அங்கு அதிதியாகக் கலந்து கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காஷிம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்தில் இன்று சகல இடங்களிலும் பாரிய சேவைகள் நடந்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் நிதி ஒதுக்கீடுகளும் சேவைகளுமே இடம்பெறுகிறது. கிழக்கின் வரலாற்றில் இது பாரிய அபிவிருத்தியாகும். எனவே இன்று மூன்று மாவட்டங்களுக்கும் நிதிகளைப் பகிர்ந்து சிறந்த சேவைகளைச் செய்யும் இன்றைய முதலமைச்சரே அடுத்த முதலமைச்சராகவும் வருவார் என்று தெரிவித்தார்.
இன்று வைத்தியத்துறைக்காக மாகாணத்தின் மூலமாகவும், மத்திய அரசு நேரடியாகவும் பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு ஊர்களும் அங்கு அமைந்திருக்கும் வைத்தியசாலைகளும் அபிவிருத்தி காண்கிறது. அன்றிருந்த நிலையில் இல்லாமல் இன்று சகல துறைகளுக்கும் நிதிகள் அள்ளி வழங்கப்பட்டு சேவைகள் இடம்பெறுகிறது. எனவே இந்த நல்லாட்சியின் மூலம் சகல சமூகமும் அபிவிருத்தி காணவேண்டும் என்பதில் இன்றைய ஜனாதிபதி விருப்பங்கொண்டுள்ளார்.
அத்துடன் ஏதாவது ஒரு பிரதேசம் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்ற குறை வராமலிருக்க வேண்டும் என்பதற்காகவே நிதியொதுக்கீட்டின் அபிவிருத்திகளின் போது பிரதேச சபைகளின் கண்காணிப்பு கட்டாயம் என்று அவர்களின் பெயர்கள் சேர்க்கப் பட்டுள்ளன. ஆகவே இலங்கையில் இன்றிருக்கும் நல்லாட்சியில் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி காண வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்று பட்டு வாழவேண்டும். அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சகல பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்று பர்வையிட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளது என்று தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment