25 Aug 2016

பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய மஹோற்சவம் நாளை.

SHARE
(பழுவூரான்)

கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன்
சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும்,  சுற்றிவர வாவியும் சுனைகளாலும் சூழப்பட்டு இயற்றை அன்னையின் சுரங்கமாய் திகழும் பழம்பெரும் பதியாம் பழுகாமம் தனில் வீற்றிருந்து நாடிவரும் அடியார்குறை தீர்க்கும் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையாரின் துவஜாரோகண மஹோற்சவப் பெருவிழா நாளை 26.08.2016ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.09.2016 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது. 

எதிர்வரும் 05.09.2016 அன்று காலையில் பஞ்சமுக விநாயகன் தேரிலேறி மக்களுக்கு அருளாட்சி வழங்கும் அற்புதமான தேரோட்ட நிகழ்வு இடம்பெற்று 06.09.2016 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: