24 Aug 2016

குறுந்திரைப்படங்கள் சமூக அவலங்களை பேச வேண்டும் -சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்.

SHARE
(டிலா )

குறுந்திரைப்படங்கள் சமூக அவலங்களை பேச வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிறஸ் கட்சியின்
அகில இலங்கை இளைஞர் காங்கிறஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

தென் கிழக்கு கலை, கலாசார அமையத்தின் ஏற்பாட்டி உளவள ஆலோசகர் றினோஸ் கனிபா இயக்கி வெளியிட்ட "மாற்றம்" குறுந்திரைப்பட -வெளியீட்டு நிகழ்வு , அண்மையில் கல்முனை -ஆஸாத் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரை நிகழ்த்துகையில்;

குறுந்திரைப்படம் உலகளாவிய ரீதியிலே பல நாடுகளிலும் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு அம்சமாகும். மிக இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஊடகமாக குறுந்திரைப்படம் காணப்படுகிது. இளைஞர்கள் சமூக கரிசனையோடு செயற்பட வேண்டும். தமக்கிருக்கின்ற வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி சமூகத்திற்கான பங்களிப்பை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். சமூக கலாசார விழுமியங்களுக்குள் நின்று சமூக உணர்வுகளை வெளிக்கொண்டு வர வேண்டும். இன்று எமது சமூகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன அவைகளையும் எதிர்காலத்தில் இங்கிருக்கும் கலைஞர்கள் வெளிக்கொண்டு வவேண்டும்.

இளைஞர்கள் இவ்வாறு சமூக மாற்றத்துக்காக பேச முன்வரும் போது சமூக அநீதிகளை களைய முடியும் என்பது திண்ணமாகும் என்றார்.
இந்த நிகழ்வில் கல்முனை தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் அமைப்பாளரும் பிரபல அறிவிப்பாலிருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி உரை நிகழ்த்தியதோடு கலைஞர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: