20 Aug 2016

பூஜைக்குச் சென்ற மகன் வீடு திரும்பவில்லை.

SHARE
எனது மகன் கடந்த 2007.11.02 அன்று காணாமல் போயுள்ளால் அன்றிலிருந்து தேடி வருகின்றோம் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு
களுமுன்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த இராசதுரை என்பர்.

வியாழக் கிழமை (18) பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

உறவுகள் காணாமல்போன குடும்பங்களுக்கு அரசாங்கம் பல உதவிகளை நல்கி வருவதாக அறிகின்றேன் ஆனால் எனது மகன் காணாமல்போய் இற்றைக்கு 8 வருடங்கள் கழிந்த நிலையிலும் எனக்கு யாரும் எதுவித உதவிகளையும் நல்கவில்லை.

எங்களுரிலுள்ள ஆயத்திற்கு அன்றயதினம் மாலை 7 மணியளவில் திருவெப்பாவை பூஜை நிகழ்வுக்குச் சென்றவர் மறுநாள் வீடு திரும்பவில்லை பின்னர் பலரிடமும் விசாரித்தும் மகனைக் காணவில்லை. தொடர்ந்து மனிதஉரிமை ஆணைக்குழு உட்பட பலரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எனது மகன் பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. எனது மகனை யார் பிடித்துக் கொண்டு போனார்கள் எனத் தெரியாது. தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது இலங்கை இராணுவமோ என யார் பிடித்துக் கொண்டு போனார்கள் எனவும் எம்மால் சொல்ல முடியாதுள்ளது.

எனது மகன் உயிரோடு இருப்பார் என நாம் நம்பவில்லை கிராம சேவை உத்தியோஸ்தரின் கருத்துக்கமைய மரணப்பதிவு எடுத்து வைத்துள்ளேன் எனக்கு 6 பிள்ளைகள் எனக்கு உழைத்துத்தரும் மகனும் காணாமல் போயுள்ளார். தற்போது தற்காலிக கொட்டகையில்தான் வாழ்ந்து வருகின்றேன். எனது மகன் தொழில் செய்து மாதாந்தம் 20000 ரூபாவுக்கு மேல் உழைப்பவர் அவர் இருந்திருந்தால் நான் தற்போது கஸ்ற்றப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: