மட்டக்களப்பு காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (ஓகஸ்ட் 21, 2016) வேனும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-01 முதியோர் இல்ல வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் இருந்து பயணித்த சுமார் 9 வயதுடைய சிறுவனே படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment