2016 ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வில் 211 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் மீண்டும் முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்த சாதனைக்கு மட் /பட் /களுதாவளை மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளான 95 புள்ளிகள் பெற்றுக் கொடுத்துள்ளனர் இதன் அடிப்படையில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியோர் 15வயதின் கீழ் ஆண்களுக்கான குண்டு தள்ளுதல் போட்டியில் செல்வன்.ஜெ.ரிசானன் 12.97 மீற்றர் எறிந்து கிழக்கு மாகாண மட்ட புதியசாதனைகளை நிலைநாட்டி முதலாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இது கடந்த (2015) தேசிய மட்ட போட்டியில் 12.82 மீற்றராக இருந்ததால் இவருக்கு 15 வதுப் பிரிவின் சிறந்த வீரருக்கான் விருது வழங்கப்பட்டது.
மேலும் இவர் பரிதிவட்டம் வீசுவதில் தங்கப்பதக்கத்தையும் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று 3 பதக்கங்களை தன்வசப்படுத்தினார் அதேபோல் செல்வன்.பே.வேணுஜன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 3.20 மீற்றர் பாய்ந்து 21 வயதுப்பிரிவு சாதனையை முறியடித்தார்.
மேலும் 17 வயதுப் பிரிவில் செல்வன் சந்திரகுமார் 2.70 மீற்றர் பாய்ந்து கிழக்கு மாகாண மட்ட சாதனை படைத்தார். கோலூன்றி பாய்தல் போட்டிகளில் ஆண்கள் பிரிவு அனைத்து தங்கப்பதக்கங்களும் எமது வீரர்கள் தம்வசப்படுத்தினர். 19 வதுப் பிரிவில் செல்வன் நுஜாந்தன் பெற்றுக் கொண்டார்.
19 வதின் கீழ் ஆண்களுக்கான 4×400 மீற்றர் போட்டியில் எமது வீரர்கள் 3.43.9 செக்கன்களில் ஓடிமுடித்து கிழக்கு மாகாண சாதனை படைத்தனர். இவ்வாறு செல்வி தி.சோஹாசினி 100 மீற்றர்இ 200 மீற்றர் போட்டியில் தங்கப்பதக்கங்களையும் 400 மீற்றர் ஓட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றதோடு அஞ்சல் நிகழ்வில் இரண்டிலும் பங்கு பற்றி 5 பதக்கங்கள் தன்வசப்படுத்தினார்.
செல்வன் தி.லிகிதரன் 110 தடைதாண்டலில் தங்கப்பதக்கத்தையும்இ 400 மீற்றர் தடைதாண்டலில் வெங்கலப் பதக்கத்தையும் வென்றார். செல்வி றூஜி 100இ400 மீற்றர் போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றனர். மொத்தமாக 10 முதலிடங்கள் 8 இரண்டாம் இடங்கள்இ 10 மூன்றாம் இடங்கள் பெறப்பட்டன. இதில் ஏழு அஞ்சல் குழுக்கள் அடங்குவதால் பதக்க அடிப்படையில் 13 தங்கப்பதக்கங்களும்இ 17 வெள்ளிப்பதக்கங்களும் 19 வெங்கலப் பதக்கங்களும் பெற்று மொத்தமாக 49 பதக்கங்களை பெற்று கிழக்கு மாகாண விளையாட்டில் சரித்திரம் படைத்தனர் களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள்.மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இ எமது கிராமத்தினதும் எமது மாவட்டத்தினதும் பெருமையை உலகறியச் செய்த முன்னாள் அதிபர் திரு.சி.அலோசியஸ் மற்றும் உடக்கல்வி ஆசிரியர் எனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்து கொள்கின்றனர் களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தினர்.
0 Comments:
Post a Comment