20 Aug 2016

முன்னாள் போராளிகள் இறக்கின்றார்கள் என்ற தகவலால் நாம் பாதிப்படைந்து போயுள்ளோம்.

SHARE
புணர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாம்களிலிருந்து வீடு வந்துள்ளவர்களின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம் இதனைக் கேட்கும்போது எனது மனம் பொறுக்குதில்லை
எனது மகனும் வவுனியா பூந்தோட்டம் முகாமில் புணர்வாழ்வளிக்கப்பட்டு வீடு வந்து எம்முடன் வாழ்ந்து வருகின்றார். எனது மகனுக்கு தற்போது 22 வயதாகின்றது அவரது உடம்பில் பல துப்பாக்கிச் சூட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன. எனவே எனது மகனை சிறந்த மருத்துவ பரிசோதனை செய்து ர சம்மந்தப்பட்டவர்கள் உதவ முன்வர வேண்டும் என மட்டக்களப்பு அம்பிளாந்துறையைச் சேர்ந்த மயில்வாகனம் யோகசுந்தரி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் வியாழக் கிழமை (18) நடைபெற்றது இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….

எனது மகனுக்கு தற்போது அடிக்கடி வருத்துவம் வந்த வண்ணமே உள்ளது கை ஒன்றும் செயற்படுத்த முடியாதவராகவுள்ளார். ஊடகங்கள் வாயிலாக முன்னாள் போராளிகள் இறக்கின்றார்கள் என்ற செய்திகயைக் கேட்கும்போது எனக்கு இரவு பலகலாக தூக்கமே வருவதில்லை. தினமும் எனது மகனைப்பற்றித்தான் சிந்தித்த வண்ணமேயுள்ளேன்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் அம்பாறை பொது வைத்தியசாலை போன்றவற்றில் சிகிச்சை பெற்றுள்ளார் அவரது முதுகில் செல் பீஸ் துண்டுகள் இருந்து அகற்றியுள்ளனர். இந்நிலையில் அவர் எதுவித ஆதாரமும் இன்றி வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புணர்வாழ்வளிக்கப்ட்டவர்கள் மரணிக்கின்றார்கள் என்ற செய்தி கேட்டதும் நான் மனநிலை பாதிப்படைந்துபோயுள்ளேன் எனத் தெரிவித்த யோகசுந்தரி…

இந்நிலையில் எதுவித தொழில்வாய்புமின்றி இருக்கும் எனது மகனுக்கு சிறியதொரு வேலைவாய்ப்பையாவது ஏற்படுத்தித்தர சம்மந்தப்பட்டவர்கள், முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: