20 Aug 2016

கட்டுரை: யுத்தத்தினால் முள்ளந்தண்டு பாதிப்புற்று வாழ்ந்து வருபவர்களின் கண்ணிர்க் கதை

SHARE
(சக்தி)

வாழ்க்கை என்பது போராட்டம் ஒன்று என பலரும் கருதுகின்றனர். ஆனாலும் தவிர்க்க முடியாத போராட்டங்களும். நிர்ப்பந்திக்கப்பட்ட போட்டாங்களும் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது எனலாம். காலத்தின் சூழ்நிலையால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தினுள்ளும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்.
இந்நிலையில் இவ்வாயுதப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல…. 

கடந்த ஆயுத யுத்தத்தில் பாதிக்கப்பட்வர்கள் இன்றும் யுத்த வடுக்களைச் சுமந்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர் யுத்த களத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன், வீடுகளிலிருந்த பொதுமக்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோர யுத்தத்தில் பாதிப்புற்ற பலர் இன்றுவரை அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமடையாமாலும், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதிக்குக் கிழ் இயங்காமலும் மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் (கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தில்) வாழ்ந்து வருகின்றன. 

இவ்வாறானவர்களின் கண்ணீர் கதையையே இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் நான் வசித்து வருகின்றேன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து செயற்பட்ட எனக்கு கடந்த யுத்தின்போது துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு வவுனியா செட்டிக்குளம் முகாமில் வைத்து புணர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது வீட்டில் எனது அக்காவுடன் வசித்து வருகின்றேன்.

இறுத்திக்கட்ட யுத்தத்தின்போது நான் செல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமையினால் எனது இருப்புக்குக் கீழ் பகுதி முற்றாக செயற்படாத நிலையேதான் இன்றுவரைக் காணப்படுகின்றது. தற்போதுவரைக்கும், எனக்கு முறையான மருத்துவ வசதிகள் எதுவும் அரசாங்கத்தினாலே அல்லது தனியார் அமைப்புக்களிடமிருந்தோ கிடைக்கவில்லை, எனது முயற்சியின் பலனாகத்தான் நான் எனது உறவினர்களின் உதவியுடன்தான் எனக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

தற்போது நான் வீட்டுக்கு வந்து 7 வருடங்கள் கழிகின்றன ஆனால் இன்றுவரை அரசாங்கம் எனக்கு எதுவித உதவியும் செய்யவில்லை, வலது குறைந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் மாதாந்தக் கொடுப்பனவான 3000 ரூபாக் கொடுப்பனவும்கூட எனக்குக் கிடைக்கவில்லை அதனை சம்மந்தப்பட்ட அரசா அதிகாரிகளும், எனக்குப் பெற்றுத்தரவில்லை. 

நான் சுயமாக இயங்க முடியாத நிலையில்தான் இன்றுவரை வாழ்ந்து வருகின்றேன் எனது அக்கவின் உதவியில்தான் என்னைத் தூக்கிப் பறித்துக் கொண்டு, வாழ்ந்து வருகின்றேன்,  இப்படிப்பட்ட எனக்கு அரசாங்கம் வழங்கும் 3000 ரூபா கொடுப்பனவைக்கூடப் பெற்றுத்தரவில்லை என்றால் மிகவும் வேதனையாகவுள்ளது.

எனக்கு மருத்துவச் செலவு மாத்திரம் மாதாந்தம் 10000 ரூபாய் செலவாகின்றது, ஒருதடவை மருந்து கட்டவில்லை காயம், பெரிதாகி, கடும் நோயாளியாகிடுவேன், எனது வாழ்வுக்கு முற்றுமுழுதான செலவைத்தான் அரசாங்கமோ அல்லது தனிநபர்களோ பெறுப்பேற்காவிடினும், சிறியதொரு உதவியாகக் கிடைத்தாலும் பரவாயில்லை அவற்றை வைத்துக் கொண்டு நான் ஓரளவு திருப்பியுடனாவது எனவு வாழ்க்கையை முன்னெடுக்கலாம். 

சம்மந்தப்பட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர், மற்றும் எமது பகுதி பிரதேச செயலாளர் உட்டபட்ட சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் எனது நிலமையினை எடுத்துரைத்தேன் எனது விபரங்கள் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பியுள்ளது என்றுதான் எனக்கு அவர்கள் பதில் வழங்கு கின்றார்கள் மாறாக எதுவித சாதகமான பதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை. 

எனது உடலில் அரைவாசிப்பகுதி இயங்காத நிலையில் உள்ள நான் ஓர் பிணம்போலதானே! என்னைப் பார்த்தாவது உதவி செய்ய முன்வராதவர்கள் இனி வேறு யாருக்குச் செய்யப்போகின்றார்கள், அதிலும் புணர்வாழ்வளிக்கப்பட்டு 7 வருடங்களாக எதுவித செயற்பாடுகளுமின்ற விட்டிலிருக்கும் எனக்கு  உதவாதவர்கள் இனிமேலும் உதவுவார்கள்? என நினைக்கவில்லை, ஒருவேளை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த காரணத்தினால்தான் எனக்கு யாரும் உதவ முன்வருகின்றார்கள் இல்லை என்றுதான் என்னால் எண்ணத் தோன்றுகின்றது.

புணர்வாழ்வளிக்கப்பட்டு வீடுவந்த பின்னர் எனக்கு 10 கோழிகழும், ஒரு கோழிக்கூடும்தான் கிடைத்தது அதுவும், வெள்ளத்தில் அள்ளுண்டு போய்விட்டது. எனக்கு யாராவது உதவி செய்ய விரும்புபவர்கள், சிறிய சில்லறைக் கடை ஒன்றை அமைத்துத் தந்தால் அது எனக்கு பெரும் வாய்ப்பாக அமையும்,  சக்கர நாற்காலியில்  இருந்த செய்படும் நான் ஓடி ஆடிச் செய்யும் எந்த வேலைகளும், பொருந்தது, எனவே எனக்கு உதவும் உள்ளங்கள் கொண்டவர்கள் யாராவது எனக்கு சிறிய சில்லறைக் கடை ஒன்றை அமைத்துத்தர முன்வந்தால் பெரும் வாய்யப்பாக அமையும் .என தனது மன ஆதங்கத்தை எம்மிடம் மிகவும் தெழிவான முறையில் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றார் கடந்த யுத்தத்தின்போது உபாதைக்குட்பட்டு முள்ளந்தண்டு பாதிப்படைந்த நிலையில் இன்றுவரை சக்கர நாற்காலியிலிருந்து வரும் கோரகல்லிமடு கிராத்தைச் சேர்ந்த க.அரசரெத்தினம்.

முன்னாள் போராளியான அரசரெத்தினம் தற்போது வாழ்ந்து வரும் நிலமையினைக்கூடக் கருத்திற்கொள்ளாத அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் இன்றுவரை  அவருக்கு எதுவித வாழ்வாதார உதவிகளையோ அல்லது வேறு ஏனைய இதர உதவிகளையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது எம்மை மாத்திரமல்ல அனைவரையும் மனம் நெகிழ வைக்கின்றது. 
காலத்தின் சூழல் போர்க் கழத்திற்குத் தள்ளினாலும், தற்போதைய யுகம் அவர்களை வடுக்கள் சுமந்த வண்ணம், சக்கர நாற்காலியிலிருந்த வண்ணமே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வாட்டி வதைக்கின்றது. பாதிக்கப்பட்டுள்போயுள்ள இவ்வாறானவர்களின் அவல நிலமை தொடர்கதையாகத்தான் நீண்டு கொண்டிருக்கப்போகின்றதோ? எனவும் எண்ணத் தோணுகின்றது. 

நான் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தேன் அப்போது வன்னியில் நடைபெற்ற யுத்தத்திற்குள் அகப்பட்டு முள்ளம் தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் முற்றாக இயங்காத நிலையில் உள்ளேன்  கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அரசாங்கம் எனக்குரிய மருத்துவ உதவியினை மேற்கொண்டிருந்தது. 

தற்போதைய நிலையில்நான் சந்திவெளிக் கிராமத்தில் வசித்து வருகின்றறேன் தற்போது எனது உடல் நிலை முற்றாக இயக்கமின்றிக் காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தினால் மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு தருகின்றார்கள், 

சிறிய சில்லறைக்கடை ஒன்றை நடாத்தி வந்த நான் எனது வருத்தம் அதிகரிக்க கடையினை மூடிவிட்டு வவுனியா வைத்தியசாலையில் 3 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன் இதனால் தற்போது கடையும் மூடப்பட்டுள்ளது. அரசாங்கம் மாதாந்தம் எனக்கு வழங்கும் 3000 ரூபாய் போதாதுள்ளது மீண்டும் எனது சிறிய கடையை இயங்கச் செய்தால் அதனால் வரும் வருமானமே எனக்கு ஓரளவு ஈடு செய்யக்கூடியதாக இருக்கும் அக்கடையை இயங்கச் செய்ய யாராவது உதவுவார்களா? என எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவற்றினைவிட கைத்தொலைபேசி, மற்றும் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளையும், நான் திருத்துவேன்.

மாதாந்தம் எனக்கு மருத்துவச் செலவுக்காக தாத்திரம் 7000 ரூபாய் செலவாகின்றது, கிணற்றில் எடுக்கும் நீரை அருந்தினால் எனக்கு உடனே காய்ச்சல் வருகின்றது தற்போது வரைக்கும் போத்திலில் அடைக்கப்பட்ட மினறல் வோட்டர் தண்ணீர்தான் குடித்து வருகின்றேன். தண்ணீழுக்கு மாத்திரம் 3000 ரூபாய் மாதாந்தம், செலவாகின்றது. எனது உறவினர்களின் உதவியுடனும் அரசாங்கம் மாதாந்தம் வழங்கும் 3000 ரூபா கொடுப்பனவுடனும்தான் நான் வாழ்ந்து வருகின்றேன் தொடர்ந்து உறவினர்களை என்னால் கஷ்ற்றப்படுத்த முடியாது எனது சொந்த முயற்சியினால் நான் வாழ்வை நடாத்த வேண்டும் என நினைக்கின்றேன் இந்நிலையில்தான் எனக்கு யாராவது கைகொடுப்பார்களா? என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

எனக்கு எனது 2 கால்களும் இருக்கின்றது என நினைத்தேன் தற்போது கால்களும் இயக்கமின்றிக் காணப்படுகின்றன. எனது மனைவி எனக்காகப் படும் பாட்டைப் பார்க்கும்போது எனக்கு மனசு தாங்குதில்லை, அவ விறகு வெட்டும்போதும், எனக்காக கிடந்துபடும் பாட்டைப் பார்க்கும்போதும் எனது நெஞ்சு வெடிக்கின்றது போல் இருக்கின்றது. நான் அதனைக் காட்டிக்கொள்வதில்லை, இவ்வாறான நிலையில்தான் நான் வாழ்ந்து வருகின்றேன், என கண்ணீர் சொட்டச் சொட்ட அவரது நிலமையினை விவரிக்கின்றார் முன்னாள் போராளியும், முள்ளம்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் வசித்துவரும் சின்னத்தம்பி யோகநாதன்.
யுத்ததினால் பாதிப்புற்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி யோகநாதனின் கருத்துக்கள் இவ்வாறு இருக்க அவரது மனைவியான ஜெகதீஸ்வரி இவ்வாறு தெரிவிக்கின்னார்.



இவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் நாம் திருமணம் செய்தோம், ஒரு இயலாதவரின் மனைவி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வருவதில்லை, எனது கணவரால் எனக்கு எதுவித கஸ்ட்டமும் இல்லை, எனது கணவர் ஓடி ஆடி செயற்படா விட்டாலும், என்னை நன்றாகப் பார்த்து வருகின்றார். அதுபோல் எனது கணவரை நான் நன்றாக கவனித்து வருவதில் எனக்கு எதுவித சிக்கல்களுமில்லை, 

எனது கணவரை ஓர் வலது குறைந்தவர், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர் என்ற மனப்பாங்கு என்னிடம் இல்லவே இல்லை, வெளியில் எனது கணவரை சக்கர நாற்காலியில் வைத்துக் கொண்டு போவதற்கும் எனக்கு வெட்கமோ, அல்லது தாழ்வு மனப்பாங்கோ என்னிடமில்லை, இவ்வாறுதான் மிகவும் அன்னியோனியமாகத்தான் எமது குடும்பம் செயற்படுகின்றது, என வெளிப்படுத்துகின்றார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட சின்னத்தம்பி யோகநாதனின் மனைவி.

மாணிடப்பிறவி எடுத்ததன் பலனாக மக்கள் எதிர் கொள்ளும் அவஸ்த்தைகளை நாம் தேடிச் செல்லும்போது அவர்கள் படும் வேதனைகளை எம்மிடம் பகிரும்போது எமக்கு மனம் நெகிழ்கின்றது. 

மக்களுக்குப் பணிதெசய்தவர்கள் தற்போது முடங்கிக் கிடக்கும்போது அவர்களின்மேல் அக்கறை கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும், இவற்றினைவிடும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அல்லது கண்டும் காணாததுபோல் செயற்படுவதென்பது மக்களுக்கு மாத்திரமின்றி இறைவனும் சகித்துக் கொள்ளமாடார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புதியபாதை என்ற ஓர் வலது குறைந்த மமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதில் யுத்தம், அனர்த்தங்களினால் பாதிப்படைந்த வர்கள் அதிகம் உள்ளனர். 318 பேர் இப்பிரதேசத்திலுள்ளனர் அதில் 150 வலது குறைந்தோர் எமது சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  எமது சக்கத்தில் அங்கத்துவம் பெறும் பலருக்கு அரசாங்கத்தினல் மாதாந்தம் வழங்கப்படும் 3000 ரூபா கொடுகப்பனவு, மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள், உதவிகளும் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

அதிலும், இப்பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிப்புற்று வலது குறைந்தோர் 200 இற்கு மேற்பட்டடோர் உள்ளனர் அதிலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர் அங்கத்துவம் பெறுகின்றனர், சில அரச சரார்பற்ற அமைப்புக்கள் மூலமும் அரசாங்கத்தின் சமூக சேவை பிரிவினூடாகவும் அவ்வப்போது சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும், யுத்தத்தினால் பாதிப்புற்றவர்களுக்கு வெளிநாடுகள் உதவி செய்கின்றன, யுலம்பெயர்ந்தவர்கள் காசு அனுப்புகின்றார்கள் என பலராலும் பேசப்படுகின்றன ஆனால் இதுவரையில் எமக்கோ அல்லது எமது சங்கத்திற்கோ அவ்வாறான எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை. எனவே எமது சக்கத்தினூடாகவோ அல்லது பிரதேச செயலகத்தினூடதாகவே எம்மை நலன் விரும்பிகள் அணுகும் பட்சத்தில் எமது தேவைப்பாடுகள் பலவற்றைப் பூர்த்தி செய்யக்கூடியதாக அமையும் என எதிர் பார்க்கின்றோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வலது குறைந்த நிலையிலுள்ள குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் உறவுகள் உதவவேண்டும், கைப்பணி வேலைகளையாவது, மேற்கொள்வதற்காகவேனும் அவர்கள் உதவவேண்டும். என எமது சங்கம் சார்பாக எதிர்பார்க்கின்றேன் என அவரது உட்கிடக்கைகளைக் கொட்டித்தீர்க்கின்றார் கிரான் பிரதேசத்திலிருந்த இயங்கிவரும் புதிய பாதை எனும் வலதுகுறைந்தோர் அமைப்பின் செயலாளர் யோ.ஜெகதீஸ்வரி.

ஜெகதீரஸ்வரியின் கருத்துக்களை வைத்துப் பார்க்கின்றபோது பாதிக்கப்பட்டுள்போயுள்ள இச்சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேணடியது அனைவரினதும் பொறுப்பாகவுள்ளது. இருந்தபோதிலும் அரசாங்கமும், சில தனியார் அமைப்புகளும், அவ்வப்போது சிறு சிறு உதவிகளை மேற்கொள்கின்றபோதிலும் வாழ்வாதார ரீதியாக பல வேவைப்பாடுகளும். மருத்துவத் தேவகளும், இன்றுவரைப் பூர்தி செய்யப்படாத நிலையே காணப்படுகின்றன. 

இந்நிலையில் கிரான் கிரதேச செயலாளர் பிரிவில் எமது தரவின் அடிப்படையில் 380 பேர் வலது குறைந்தோர் உள்ளனர் இதில் 32 பேர் 3 சக்கர வண்டியில் இருந்து செயற்படுகின்றார்கள் இதில் யுத்தத்தினால் பாதிப்புற்றவர்கள் 10 பேர் உள்ளனர் இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குகின்றார்.
இவ்வாறானவர்களுக்கு சமூக சேவைத் திணைக்களத்தினால் 3 சக்கர துவிச்சக்கரவண்டிகள், சக்கர நாற்காலிகள், போன்றன வழங்கி வருகின்றோம் இவ்றினைவிட அரசினால் மாதாந்தம், வழங்கப்படுகின்ற 3000 ரூபாய் கொடுப்பவு 65 பேருக்கு கொடுக்கப்படுகின்றன, மேலும் 65 பேருக்கு இக்கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப் பட்டுள்ளன இன்னும் அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை அந்த அனுமதி கிடைத்ததும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளையும், பெற்றுக் கொடுக்க முடியும்.

இவற்றினைவிட இவ்வாறு பாதிக்கப்டிபட்டவர்களுக்கு வீடுகள், மலசல கூடவசதிகள், போன்றவசதிகளும், வாழ்வாதார உதவிகளும், ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் மக்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள், மக்களைத் திருப்திப்படுத்துவது என்பது கடினமாகவுள்ளது என கிரான் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு தெரிவிக்கின்றது.

எது எவ்வாறு அமைந்தாலும், பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு தன்னிறைவான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும், இந்நிலையில் புலம் பெயர் உறவுகள் இப்படிப்பட்டவர்கள் மீது க்கறை செலுத்தி அவர்களுக்குதிர தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கமும், அரச சார்பற்ற அமைப்புக்களும், இம்மக்கள் மீது அதித அக்கறை செலுத்தி உயர்ச்சியடைச் செய்ய வேண்டும் என்பதே அனைவரினதும் எத்திர்பார்ப்பாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: