7 Aug 2016

இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் சனிக்கிழமை (06) மாலை இரண்டு வீதிகள் புணரமைப்புச்
செய்வதற்காக அங்குரார்ப்பண வேலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை – கற்சேனை பிரதான வீதி  6859790 ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1150 மீற்றர் காபட் இடப்பட்டு, புணரமைப்புச் செய்வதற்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் 200 மீற்றர் நீளம் கொண்ட களுவாஞ்சிகுடி மணல் வீதி 4307100 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வடிகானுடன் கொங்கிறீட் வீதியாக செப்பனிடுவதற்கும் அன்றயதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்விரண்டு வீதிகளும் மிக நீண்டகாலமாகவிருந்து குன்றும் குழியுமாகக் காட்சிதருவதோடு, பிரயாணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவற்றில் பயணித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பரிந்துரைக்கமைய இவ்வீதிகளின் புணரமைப்புக்களுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார்.

இவ்வீதிப் புணரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திட்டப் பணிப்பாளர் எஸ்.யு.செனவிரெத்ன உட்பட பலர் கலந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். இப்புணரமைப்;பு வேலைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: