மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆண்டு தினத்தை முன்னிட்டு புதன் கிழமை (10) மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளதாக மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
வைத்தியசாலை தினத்தை முன்னிட்டு வருடாந்தம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வைத்தியசாலையில் பல நிகழ்வுகள் செய்யப்பட்டு வருவது வழக்கம் இந்நிலையில் புதன் கிழமை வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது இரத்ததானம் வழங்கும் இரத்த நன்கொடையாளர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment