3 Aug 2016

950 மில்லியன் செலவில் ஏறாவூர் பற்றில் மாபெரும் திண்மக் கழிவு முகாமைத்துவம் நில நிறப்புகை நிலையம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, தொடக்கம் ஓட்டமாவடிவரை திண்மக் கழிவு முகாமைத்துவம் மிக மோசமாகச் சீரளிந்து பிரதேச குப்பைகளை கொட்ட சரியான இடங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கிழக்கு முதல்வரின் பெருமுயற்சியால் யுனொப்ஸ் நிறுவனத்தின் மூலம் பெருந்தொகையான 950 மில்லியன் நிதி வழங்கப்பட்டு
திண்மக் கழிவு முகாமைத்துவம் நில நிறப்புகை நிலையம் ஏறாவூர் பற்றில் அமைக்கப் பட்டு வருகிறது.

யுனொப்ஸ் நிறுவனத்தின் தென்னாசிய செயற்படுத்தல் முகாமையாளர் சிமோநெட்டா சிலிக்காட்டோ  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பு புதன் கிழமை (03) ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றன

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபையான மட்டக்களப்பு, நகர சபைகளான காத்தான்குடி, ஏறாவூர், பிரதேச சபைகளான ஏறாவூர் பற்று, ஆரயம்பதி, களுதாவளை, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகியவற்றின் நேரடி பிரயோசனம் கருதியே இச்செயற்பாடு இடம்பெறுவதுடன் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் இதனால் பிரயோசனம் அடையவுள்ளன.

இச் சந்திப்பின் பின்னர் திண்மக்கழிவு முகாமைத்துவம் நில நிறப்புகை நிலையம் அமைக்கப்படும் இடத்தினையும் இக்குழுவினர் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: