மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனையில் சனிக்;கிழமை இரவு 6 பசு மாடுகளைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்ததோடு
மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் தாம் கைப்பற்றியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்படியான அனுமதிப்பத்திரமின்றி இந்த மாடுகள் மாவடியோடை எனும் பிரதேசத்திலிருந்து ஏறாவூர் நகரப் பகுதிக்கு ஏற்றிச் செல்லப்படும்போது பொலிஸார் இவற்றைக் கைப்பற்றினர்.
இந்தப் பிரதேசங்களிலிருந்து இறைச்சிக்காக மாடுகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே பொலிஸார் மறைந்திருந்து கடத்தி வரப்பட்ட மாடுகளைக் கைப்பற்றியுயள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மாடுகள் தற்சமயம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மனித நுகர்வுக்கு ஒவ்வாத நோய்வாய்ப்பட்டதாக இருக்கும் மாடுகளையும் சில நபர்கள் கடத்தி வந்து அவற்றை இறைச்சியாக விற்பனை செய்வதாக நுகர்வோர் அதிருப்பதி தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment