22 Aug 2016

300 வறிய குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு

SHARE
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 300 வறிய குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தலமையில் இயங்கும் ஹிரா பௌண்டேசன் அமைப்பினால் இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிறன்று பிற்பகல் 21.08.2016 ஏறாவூர் நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூர்த்திப் பயனாளிக் குடும்பங்களிலிருந்த தெரிவு செய்யப்பட்ட குடி நீர் வசதியற்றிருப்பவர்கள் 300 பேர் தலா 5480 ரூபாய் காசோலையைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பயனாளிகள் முன்னிலையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேலும் 300 சமூர்த்தி உதவி பெறும் குடிநீர் வசதியற்ற குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார





SHARE

Author: verified_user

0 Comments: