4 Aug 2016

மட். போரதீவுப்பற்று இளைஞர் அபிவிருத்திக்காக 3 செயற்றிட்டங்கள்

SHARE
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் அபிவிருத்திக்காக 3 செயற்றிட்டங்கள் இளைஞர்
கழகங்களினூடாக மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் ஒவ்வொரு திட்டத்திற்கும் தலா 75000 ரூபாய்  வீதம் 225000 ரூபாவை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் சி.அருளானந்தம் வியாழக் கிழமை (04) தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களிடமிருந்து இதற்காக 20 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 20 விண்ணப்பங்களிலிருந்தும் 3 விண்ணப்பங்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழை (05) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்  நடைபெறவுள்ளன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஒரு செயற்றிட்டத்திற்கு வழங்கப்படும் 75000 ரூபாவை வைத்துக் கொண்டு தெரிவு செய்யப்படும் இளைஞர் கழகம் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் தனவந்தவர்கள், மற்றும் ஏனைய உதவி வழங்குனர்களிடமிருந்து  175000 ரூபாவுக்கு மேல் உதவிகளைப் பெற்று அக்குறித்த திட்டத்தினை 250000 ரூபாவிற்கு செய்து முடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: