7 Aug 2016

விபத்தில் 18 வயதுடைய இளைஞன் இஸ்தலத்தில் பலி.

SHARE

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவில் சனிக்கிழமை (06) இரவு 11 மணியளவில் இடம்பெறற்ற
வீதி விபத்தில் ஒருவருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

களுதாவளையிலிருந்து தேற்றாத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதில் களுதாவளை அரசடி வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாலசுந்தரம் துஷியந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் முடிவுற்றதும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளையும் முன்நெடுத்துள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: