25 Jul 2016

காத்தான்குடியில் மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில கும்பல் ஒன்று இரவில் தாக்குதல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிறு (ஜுலை 24, 2016) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காத்தான்குடி 5 ஐச் சேர்ந்த அல் ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம். அர்ஷாத் (வயது 18) மற்றும் ஏ.எம்.எம். ஹஷீப் (வயது 17) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஞாயிறு இரவு 8.30 மணியளவில் இந்த மாணவர்கள் இருவரும் வீதியால் வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த கும்பல் கைகளால் தாக்குதல் நடத்தி பிறிதொரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த மறைவிடத்தில் வைத்து தங்களை இரவு 11 மணிவரை போத்தலாலும் கைகளாலும் தாக்கினர் என்று பொலிஸ் வாக்கு மூலத்தில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தங்களைத் தாக்கிய சுமார் 20 பேர் கொண்ட கும்பலில் இருந்தோரை தங்களால் அடையாளம் காட்;ட முடியும் என்றும் தாக்கப்பட்ட மாணர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: