கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இக்கண்காட்சி வியாழக்கிழமைவரை நடைபெறும்.
இக்கண்காட்சியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடுகள், கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் வெளியீடுகள், இராமகிருஷ்ணமிஷன் நூல்கள், வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் சேகரிப்புகள், சூரிய நிறுவன வெளியீடுகள், புகலிட இலங்கியங்கள் அரங்கியல் நூல்கள், களுதாவளை பொதுநூலக கட்புல துறைசார் சேகரிப்புகள் போன்றவை விற்பனைக்காகவும் காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment