18 Jul 2016

களுதாவளை.ம.வி.மாணவிகள் சாதனை

SHARE
மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய மாணவிகள் 2016 ஆம் ஆண்டிற்கான தேசியமட்டத்தில் நடைபெற்ற தமிழ்த்
தினப்போட்டியில் பங்குபற்றி  முதலாமிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வாரம் தேசிய மட்டத்திலான போட்டிகள் அனைத்தும் கொழும்பு டீ.எஸ்.சேனநாக்கா கல்லுரியில் நடைபெற்றது. இதன் போது முதலாம் பிரிவில் தனிக் குழு நடனப் போட்டியில் பங்குபற்றியே குறித்த சாதனையை  மாணவிகள் நிலை நாட்டியுள்ளனர்.

போட்டியில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கும் இதனை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் இதன் போது தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: