மட்டக்களப்பு புதிய காத்தான்குடி-06, நதியா பீச் என்றழைக்கப்படும் கடற்கரை பகுதி நீரோடைக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் கால் முறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (ஜுலை 26. 2016) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கர்த்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது சஹாப்தீன் (வயது-45) என்பவரே காயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நீரோடைக்கு மேலால் உள்ள பாலம் சுனாமிக்கு பின்னரான காலப்பகுதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்தப் பாலத்திற்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. எதிர்காலங்களில் இப்படியான விபத்துக்கள் இடம்பெறுவதை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment