11 Jul 2016

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி-06, பிரதான வீதி, மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஞாயிறு மாலை (ஜுலை 10, 2016) இடம்பெற்ற
வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: