3 Jul 2016

கேரளக் கஞ்சாவை பொலிஸாரிடம் விற்கச் சென்ற நபர் கைது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா கிராமத்தில் வைத்து இந்திய கேரளக் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்ததுடன் அவற்றை விற்பனைக்காக எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 18 வயதான
இளைஞர் ஒருவரைத்தாம் கைது செய்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. வஹாப் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றித் தெரியவருதாவது, காத்தான்குடி நகர பிரதேசத்திலும் அயற்கிராமங்களிலும் கேரளக் கஞ்சாவை நபர் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகசவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. வஹாப் தலைமையிலான குழுவினர் இரகசிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்த வகையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து வந்த அந்த நபர் மாறுவேடத்தில் இருந்த பொலிஸாரிடமே கஞ்சாவை விற்க முற்பட்ட பொழுது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3242 மில்லிகிராம் கேரளக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: