13 Jul 2016

தமிழ்மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில்

SHARE
தமிழர்தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு,  தமிழர்கலைகள் அருகிவரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒருகேள்விக்குறியாக்கப்பட்டுவரும் இவ்வேளையில், எமக்கான கலைகளைவளர்த்து, கலாச்சாரத்தினைபாதுகாத்து,
எமது இளையசமுதாயத்தைசரியானதிசையில்வழிநடாத்துவதுஇன்றையவரலாற்றுத்தேவையாகும்.

இந்தவகையில், தமிழ்மக்கள் பேரவையின்கலை கலாசாரத்திற்கான உபகுழுவினர் எதிர்வரும் செப்டம்பர்மாதம் தமிழர்தாயகத்தில் மாபெரும்முத்தமிழ் விழாஒன்றினைஏற்பாடுசெய்கின்றனர்.
தமிழ்மக்கள்பேரவையினரின்முதலாவதுமுத்தமிழ்விழா,

தமிழர் தாயகத்தின் கலையின் பிறப்பிடமாம் மீன்பாடும் மட்டுநகரில் ஒழுங்குசெய்யப்படு கின்றது. இம்முத்தமிழ் விழாவிற்கான ஆரம்பகட்ட செயற்திட்டங்கள் தற்சமயம்மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், இதற்கான முத்தமிழ் விழாக்குழுவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.


தமிழ்மக்கள் பேரவையின். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்விடையம் தொடர்பில் அதிர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இக்குழுவின்போஷகர்களாக கலையில் பேரார்வமுள்ள மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத்சுவாமி பிரபுபிறேமானந்தமகராஜ் அவர்களும், மட்டக்களப்பு மறைமாவட்ட பேராயர்அதி. வணக்கத்துக்குறிய ஜோசப் பொன்னையா அவர்களும் செயற்படுகின்றனர்.

எமதுமுத்தமிழ்விழாக்குழுவில்இணைந்துஇம்மாபெரும்முத்தமிழ்விழாவைஏற்பாடுசெய்து, அதனைசெவ்வனேநடாத்திமுடிக்கஎம்முடன்உழைக்க‌விரும்பும்கலைஞர்கள், இளைஞர்கள், யுவதிகள், மற்றும் ஆர்வலர்களை தமிழ்மக்கள் பேரவைஅன்புரிமையுடன் அழைத்துநிற்கின்றது.

இதற்குஎமதுமுத்தமிழ்விழாக்குழுவினருடன்0710145723 என்ற இலக்கதொலை பேசியூடாகதொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும்ஐந்து அரங்குகளாக, மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இம்முத்தமிழ்விழாவில், கலைநிகழ்வுகளை மேடையேற்றவிரும்பும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தகலைஞர்கள், கலைக்கூடங்கள் மற்றும் அமைப்புக்கள் எம்முடன் மேற்குறிப்பிட்ட இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளும்படியும் வேண்டிக் கொள்கின்றோம்.


தாயகத்தில்மிகவும் நீண்டகால இடைவெளியின் பின்நடைபெற இருக்கும் இம்மாபெரும்முத்தழிழ் விழாவில் எமதுபுலம் பெயர் உறவுகளும் பங்கு கொண்டு கலை ஆக்கங்களை மேடையேற்றி, தமிழைக்காத்து, தமிழ்வளர்க்க ஒன்றாய் உழைப்போம் எனவும், தமிழனாய் தலைநிமிர்ந்து பயனிப்போம் எனவும் வேண்டி நிற்கின்றோம் தமிழ்மக்கள் பேரவையின் கலை, கலாச்சாரஉபகுழு ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: