மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயத்தில் ஆய்வு கூடத்திற்கான
அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (23) இடம்பெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணசபையினால் நிதியொதுக்கப்பட்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்பார்வையில் 5.5மில்லியன் செலவில் குறித்த ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல்லினை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் வைபவரீதியாக நட்டதுடன் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் அடிக்கல் நட்டு வைத்தனர்.
0 Comments:
Post a Comment